Published:Updated:

வகுப்பறைக்கு வந்த ஊராட்சி மன்றம்!

‘ஊராட்சி அமைப்புகள்’ பாடத்துக்கு உரியது.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஊராட்சி மன்ற உறுப்பினராக 11 மாணவர்களையும், தலைவியாக ஒரு மாணவியையும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு, ஊராட்சி மன்றக் கூட்டத்தைக் கூட்டச் செய்யவும்.

வகுப்பறைக்கு வந்த ஊராட்சி மன்றம்!

மாணவர்கள், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகள் குறித்து மனு ஒன்றைத் தயார்செய்ய வேண்டும். அந்தக் கோரிக்கை மனுவை, ஊராட்சி மன்றக் கூட்டத்தில் எடுத்துரைத்து, தலைவரிடம் வழங்க வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வகுப்பறைக்கு வந்த ஊராட்சி மன்றம்!

ஊரட்சி மன்றத் தலைவர், அந்தக் கோரிக்கையைப் பரிசீலித்துப் பார்த்து,  அதை மறுத்தும்

வகுப்பறைக்கு வந்த ஊராட்சி மன்றம்!

ஆதரித்தும் பேச, சபையோருக்கு வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

சாலை அமைத்தல், பேருந்து வசதி செய்து தருதல், குடிநீர் பிரச்னைகள் குறித்து மனு செய்வர். பிற தேவைகள் குறித்துப் பேசும் வகையில், மக்கள் பிரச்னை குறித்து உறுப்பினர்களிடம் மனு வழங்கச் செய்யலாம்.

ஊராட்சி மன்றப் பணிகள் குறித்தும், உறுப்பினரின் பதவிக் காலம் குறித்தும், பெண்கள் பிரதிநிதித்துவம் குறித்தும் தெரிந்துவைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், மாணவர்களுக்கு மதிப்பீடு வழங்கலாம்.

- க.சரவணன் டாக்டர் டி.திருஞானம் தொடக்கப் பள்ளி,மதுரை.