Published:Updated:

மரத்தடியில் மாணவர்கள்... வகுப்பறையில் அலுவலகம்! - 5 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்

பாலஜோதி.ரா
மரத்தடியில் மாணவர்கள்... வகுப்பறையில் அலுவலகம்! - 5 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்
மரத்தடியில் மாணவர்கள்... வகுப்பறையில் அலுவலகம்! - 5 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்
மரத்தடியில் மாணவர்கள்... வகுப்பறையில் அலுவலகம்! - 5 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்

அன்னவாசல் அரசுத் தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டடத்தில் செயல்படும் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மரத்தடியில் மாணவர்கள்... வகுப்பறையில் அலுவலகம்! - 5 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்


 

இந்தக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கே பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. பழுதடைந்தக் கட்டடம், உடைந்த பெஞ்ச், பாடம் நடத்துவதில் ஆர்வமில்லாத ஆசிரியர்கள் என்று நிறைய காரணங்களைப் பெற்றோர்கள் முன்வைக்கிறார்கள். தனியார் பள்ளிகள் படிப்பு செலவுக்காக மூச்சே நின்றுவிடும் அளவுக்கு பீஸ் கேட்டாலும் அதை மறுபேச்சு இல்லாமல் கட்டிவிட்டு தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் அங்கு சேர்ப்பதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தநிலையில், அரசுப் பள்ளிகளும் பல விநோதப் பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளத்தான் செய்கின்றன. அப்படி ஒரு பள்ளியைப் பற்றிய அவலம்தான் இது. 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் உள்ள வகுப்பறை ஒன்றில், பல வருடங்களாகவே உதவி தொடக்கப்பள்ளி அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

மரத்தடியில் மாணவர்கள்... வகுப்பறையில் அலுவலகம்! - 5 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்

இந்தத் தொடக்கப்பள்ளியில் தற்போது சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்குப் போதிய வகுப்பறை கட்டடம் இருந்தும், மரத்தடி நிழலில் வகுப்புகள் நடத்தும் அவலச்சூழலும் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது வகுப்புகள் நடத்துவதற்கென்று கட்டப்பட்ட கட்டடத்தில், தற்போது உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் செயல்பட்டு வருவதுதான் அதற்குக் காரணம். இதை உடனடி இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அந்தப் பள்ளியில் இருக்கும் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கும் விதமாக புதிய ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தர்மராஜன் பேசும்போது, "கடந்த குடியரசுத் தினத்தன்று பள்ளியில் நடக்கும் கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எங்களுக்குப் பள்ளியின் சார்பாக அழைப்பு  வந்தது. அதில் கலந்துகொள்வதற்காக நான் அங்கு சென்றபோதுதான் உள்ளே உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிற விஷயமே தெரிந்தது.

விசாரித்தபோது, கடந்த ஐந்து வருஷங்களாக இந்த அலுவலகம் இங்கு செயல்பட்டு வருவதாகக் கூறினார்கள். நிறைய பள்ளிகளில் போதிய கட்டடமே இல்லாமல் மரத்தடிகளிலும் வரண்டாக்களிலும் வகுப்பு நடைபாதையிலும் மாணவர்களை அமரவைத்து, வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆனால், அன்னவாசல் தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கான வகுப்பறைக் கட்டடம் இருந்தும் அதில் மாணவர்கள் படிக்கமுடியாதபடி, உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலகம் செயல்படுவதற்கு பள்ளி மாணவர்களின் வகுப்பறைதான் அவர்களுக்குக் கிடைத்ததா. இந்த அலுவலகத்தை வேறு இடத்துக்கு உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும். அந்த இடத்தில் மாணவர்களுக்கான வகுப்புகள் மட்டுமே நடக்க வேண்டும். இதை எங்கள் கட்சியின் தீர்மானமாக மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனுவாகவும் கொடுக்கப்போகிறோம்" என்றார்.