Published:Updated:

‘நீர்' பாடத்துக்கு உரியது.

‘நீர்' பாடத்துக்கு உரியது.
பிரீமியம் ஸ்டோரி
‘நீர்' பாடத்துக்கு உரியது.

‘நீர்' பாடத்துக்கு உரியது.

‘நீர்' பாடத்துக்கு உரியது.

‘நீர்' பாடத்துக்கு உரியது.

Published:Updated:
‘நீர்' பாடத்துக்கு உரியது.
பிரீமியம் ஸ்டோரி
‘நீர்' பாடத்துக்கு உரியது.

நீர் தொடர்பான சில சோதனைகளைச் செய்யலாம்.

1. மேல் எழும்பும் நீர்!

வாய் அகன்ற பாத்திரத்தை நீரால் நிரப்பவும். காலி இங்க் பாட்டிலில் சூடான நீரை நிரப்பி, அதில் சிவப்பு மை சில துளிகள் கலந்து, பாட்டிலை மூடிவிடவும். நீர் நிரம்பிய பாத்திரத்தின் மையப் பகுதியில் இங்க் பாட்டிலை வைத்து,  மூடியைக் கழற்றவும். சுடுநீரானது, குபுகுபு என மேலே எழும்புவதைக் காணலாம். காரணம், நீரைவிட சுடுநீரின் அடர்த்தி குறைவு.

‘நீர்' பாடத்துக்கு உரியது.

2. மணல் வடிகட்டி!

பிளாஸ்டிக் பாட்டிலை இரண்டாக வெட்டவும். மேல் பகுதியின் மூடியில் துளையிட்டு, அடிப்பகுதியின் மேலே  தலைகீழாகக் கவிழ்க்கவும். அதனுள், பஞ்சால் அடுக்கை உருவாக்கவும். பிறகு, நீரில் நன்கு கழுவிய மணலைப் பஞ்சு அடுக்கின் மீது 5 செ.மீ அளவுக்கு நிரப்பவும். அதன் மீது நன்கு சுத்தம்செய்த கூழாங்கற்களால் அடுக்கை உருவாக்கவும். மாசு கலந்த நீரைச் சிறிது சிறிதாக ஊற்றவும். அந்த நீர் உயிரி வடிகட்டியின் மூலம் சுத்தமான நீராக வடிகட்டப்பட்டு அடிப்பகுதிக்கு வரும்.

3. நடக்கும் நீர்!

ஏழு பிளாஸ்டிக் கப்புகளை மேசை மீது வரிசையாக வைக்கவும். 1, 3, 5 மற்றும் 7-வது கப்புகளில் பாதி அளவு நீர் நிரப்பவும். 1 மற்றும் 7-வது கப்புகளில் சிவப்பு நிற மையைக் கலக்கவும். 3-வது கப்பில் மஞ்சள் நிற மையையும், 5-வது கப்பில் நீல நிற மையையும் கலக்கவும். பிறகு, உறிஞ்சுத் தாளை நீளவாக்கில் மடித்து, ஒரு முனையை முதலாவது கப்பிலும், மறுமுனையை இரண்டாவது கப்பிலும் வைத்து இணைப்பை ஏற்படுத்தவும். இதேபோல  எல்லா கப்புகளுக்கு இடையேயும் ஏற்படுத்தவும். நீர், சில மணி நேரங்களில் உயரமான இடத்திலிருந்து உயரம் குறைவான இடத்தை நோக்கி இடம்பெயரும். வண்ணங்கள் ஒன்றோடு ஒன்று சேரும்போது புதிய வண்ணங்கள் தோன்றும். 

4. நீரின் வேகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘நீர்' பாடத்துக்கு உரியது.

ஒரே அளவுள்ள இரண்டு பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்து, அவற்றின் மூடிகளில்  இரண்டு துளைகள் இடவும். ஒரு பாட்டிலின் மூடியில் இரண்டு சிறிய ஸ்ட்ராக்களைச் செருகவும். ஒன்று வெளிப்புறமும், மற்றொன்று உட்புறமும் இருக்க வேண்டும். மற்றொரு பாட்டிலின் மூடியில் ஒரு நீளமான மற்றும் ஒரு சிறிய ஸ்ட்ராக்களைச் செருகவும். (நீளமான ஸ்ட்ரா வெளிப்புறத்தில் இருக்க வேண்டும்). பிறகு, இரண்டு

‘நீர்' பாடத்துக்கு உரியது.

பாட்டில்களிலும் நீரை நிரப்பி மூடி, தலைகீழாகத் திருப்பவும். நீளமான ஸ்ட்ரா உள்ள பாட்டிலின் நீர், சிறிய ஸ்ட்ரா உள்ள பாட்டிலைவிட விரைவாக வெளியேறும். காரணம், ஸ்ட்ராவில் குழாயில் அதிக தண்ணீர் இருப்பதால், அது அதிக விசையைப் பெறுகின்றது.

5. மேலே செல்லும் மை!

ஒரு மேசையின் மீது வண்ண மையை ஊற்றவும். நீரில் நனைக்கப்பட்ட இரண்டு கண்ணாடித் தகடுகளை இணையாக கெட்டியாகப் பிடித்து, மை மீது செங்குத்தாக நிற்கவைக்கவும். மை, கண்ணாடியில் மேல் நோக்கிப் பரவும். காரணம், கண்ணாடித் தகடுகளை இணையாக, செங்குத்தாக நிற்கவைத்து நன்றாக அழுத்தும்போது, அதனுள் அடைபட்ட காற்று வெளியேறி, அழுத்தம் குறைந்த பகுதியை உண்டாக்கும். வெளிக்காற்றின் அழுத்தத்தினால் மேசை மீது உள்ள வண்ண மை கண்ணாடிகளுக்கு இடையே மேல் நோக்கி ஏறும்.

- ஜி.கிறிஸ்டோபர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism