
சைக்கிள் வைத்திருக்காத மாணவனை அழைத்து, `நீ வெகுதூரம் செல்ல வேண்டும் என்றால் என்ன செய்வாய்?' என்று கேட்டால், `வாடகைக்கு சைக்கிள் எடுப்பேன்' என்பார். பள்ளிக்கு அருகில் உள்ள வாடகை சைக்கிள் கடைக்குச் சென்று, ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு வாடகை? நாள் வாடகை எவ்வளவு என்பதைக் குறித்துவரச் செய்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
`சைக்கிளை வாடகைக்கு எடுத்தால், நமக்கு சொந்தம் இல்லை. மாறாக, தவணை முறையில் சைக்கிள் வாங்கலாம். பெரிய தொகையை மாதத் தவணையாகப் பிரித்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் கட்டி அந்த சைக்கிளை சொந்தமாக்கிக்கொள்ளலாம்' என விளக்கினேன்.

இதுபோல, வங்கிகளில் கொடுக்கக்கூடிய வீட்டுக் கடன் வசதி, வாகன கடன் வசதி ஆகியவற்றை விளக்கலாம்.

விளம்பரங்கள் பலவற்றைக் காண்பித்து, அதற்கான விளக்கம் அளிக்கலாம். 0% வட்டித் திட்டம், 100% கடன் திட்டம் குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருள்களை எப்படி தவணை முறையில் வாங்கலாம் என்பதை, வகுப்பறையைப் பொருள்கள் விற்கும் இடமாக மாற்றி விளக்கலாம்.
மாணவர்கள் செய்தி சேகரிப்பதன் அடிப்படையில் மதிப்பீடு வழங்கலாம்.
- கரு.செல்வமீனாள்,சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.
