Published:Updated:

முட்டையில் ஓர் ஆராய்ச்சி!

‘நீர் ஓர் அரிய வளம்’ பாடத்துக்கு உரியது.

பிரீமியம் ஸ்டோரி

தேவையான பொருட்கள்: மூன்று முட்டைகள், மூன்று கண்ணாடிக் குவளைகள், தூள்உப்பு, தண்ணீர்.

செய்முறை:

முட்டையில் ஓர் ஆராய்ச்சி!
முட்டையில் ஓர் ஆராய்ச்சி!

மூன்று கண்ணாடிக் குவளைகளில் முக்கால் பாகம் நீரை நிரப்பவும். முதல் கண்ணாடிக்

முட்டையில் ஓர் ஆராய்ச்சி!

குவளையில், ஒரு முட்டையை கவனமாகப் போடவும். முட்டை, குவளையின் அடியில் சென்றுவிடும். இரண்டாவது கண்ணாடிக் குவளையில், ஒரு தேக்கரண்டி உப்புத்தூளை போட்டு நன்கு கலக்கவும். அதில், இரண்டாவது முட்டையைப் போடவும். முட்டை,  குவளையின் மையத்தில் மிதக்கும். மூன்றாவது கண்ணாடிக் குவளையில், நான்கு தேக்கரண்டி உப்புத்தூளைப் போட்டு நன்கு கலக்கவும். அதில், மூன்றாவது முட்டையைப் போடவும். முட்டை, நீரின் மேல் பகுதியில் மிதக்கும்.

உப்பு கலக்காத நீரில் அடர்த்தி குறைவு என்பதால், முட்டை குவளையின் அடியில் செல்கிறது. உப்பை எந்த அளவு சேர்க்கிறோமோ, அந்த அளவுக்கு நீரின் அடர்த்தி அதிகம் ஆவதால், இரண்டாவது குவளையின் மையத்திலும், மூன்றாவது குவளையில் மேலேயும் மிதக்கவும் செய்கிறது.

- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு