வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (13/02/2018)

கடைசி தொடர்பு:17:12 (17/02/2018)

கம்ப்யூட்டர் சயின்ஸில் சென்டம் எடுக்க ஈஸி டிப்ஸ்! #PublicExamTips

ருத்துவம், பொறியியல் அடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ்தான், மாணவர்களுக்கு எதிர்கால வேலைவாய்ப்புக்கான நம்பிக்கையைக் கொடுப்பதாக உள்ளது. அதனால், இந்த சப்ஜெக்ட்டில் நல்ல மதிப்பெண் பெற, மாணவர்கள் தங்களை எப்படித் தயார்செய்துகொள்ள வேண்டும்? மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவரும், சி.பி.எஸ்.சி. ஆசிரியர் ஒருவரும் எடுத்துச்சொல்கிறார்கள். 

கம்ப்யூட்டர் சயின்ஸ்

ஷேக் இப்ராஹிம், கம்பர் கார்ப்பரேஷன் மேல்நிலைப் பள்ளி, சுப்ரமணியபுரம், மதுரை. 

ஒரு மதிப்பெண் கேள்வியில் உஷார் மாணவர்களே... 

50 மதிப்பெண்ணுக்கு பிராக்டிகல் செய்துவிடுவார்கள். மீதமுள்ள 150 மதிப்பெண்களில் 75 மதிப்பெண்களுக்கு choose the best answer என 75 ஒன் வேர்ட் கேட்பார்கள். அத்தனைக்கும் பதில் அளிக்க வேண்டும். இதற்கு, புக்பேக்கில் உள்ள ஒரு மதிப்பெண் கேள்விகளை மட்டும் படிப்பதில் பயனில்லை. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தின் இரண்டு வால்யூம்களையும் படித்தால்தான் 75 மதிப்பெண் எடுக்கமுடியும். 

OMR ஷீட்டில் எப்படிப் பூர்த்தி செய்வது? 

கம்ப்யூட்டர் சயின்ஸில் ஒரு வார்த்தை கேள்விகளுக்கான பதிலை OMR ஷீட்டில்தான் (டி.என்.பி.எஸ்.சி. எக்ஸாம்போல), கறுப்பு பால் பாயின்ட் பேனாவால் ஷேட் செய்யவேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்புவரை பென்சிலால் ஷேட் செய்யச் சொல்லியிருந்ததால், போன வருடம்கூட பலர் பென்சிலுடன் வந்து தவித்தார்கள். ஸோ, கறுப்பு பால் பாயின்ட் பேனாவை மறந்துவிடாதீர்கள். 

உங்கள் கேள்வித்தாளிலும் OMR ஷீட்டிலும் ஒரே எண் உள்ளதா என்பதை செக் செய்துவிட்டு, அந்த எண்ணை ஷேட் செய்யுங்கள். பிறகு, பதில்களை ஷேட் செய்ய ஆரம்பியுங்கள். 

எக்ஸாம்

5 மதிப்பெண் கேள்விகளில் முக்கியமானவை: 

7 கேள்விகள் கேட்பார்கள். முதல் சேப்டரிலிருந்து ஐந்தாவது சேப்டர் வரை, இரண்டு 5 மதிப்பெண் கேள்விகளும், ஆறாவது சேப்டரில் 2 கேள்விகளும், ஏழாவது சேப்டரில் ஒரு கேள்வியும் வரும். ஸோ, வால்யூம் ஒன்றிலிருந்தே 5 கேள்விகள் வந்துவிடும். இதில், வால்யூம் ஒன்றில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிற கேள்விகளைப் பார்ப்போம்.

(அ) தானியங்கி எழுத்துப்பிழைத் திருத்தம். 

(ஆ) உரையில் ஒரு சொல்லுக்குப் பதிலாக, பிறிதொரு சொல்லைப் புகுத்தும் முறை. 

(இ) தரவு தளத்தின் வகைகள். 

(ஈ) சார்பு என்றால் என்ன? உதாரணத்துடன் விளக்குக. 

(உ) கணிப்பொறி விதி தரவு செயலாக்கத்தின் நன்மைகள். 

வால்யூம் இரண்டில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள கேள்விகள்: 

அ) ஏதேனும் ஒரு மடக்கையை எடுத்துக்காட்டுடன் விளக்குக. 

(ஆ) செயற்கூறு, செயற்குறி, பணி மிகுப்பின் விதிமுறைகள். 

(இ) மதிப்பு மூலம் அமைத்தல், குறிப்பு மூலம் அமைத்தல் எடுத்துக்காட்டுடன் விளக்குக. 

(ஈ) ஆக்கி, அழிப்பிகளின் விதிமுறைகள். 

பரீட்சை

கம்ப்யூட்டர் புரோகிராமில் என்ன மாதிரி கேள்விகள் வரலாம்? 

(அ) கம்ப்யூட்டர் புரோகிராம் கோடிங்கில் 10 தவறுகளைக் கண்டுபிடித்து, அவற்றுக்கான சரியான பதிலையும் எழுதவேண்டும். 

(ஆ) ஒரு புரோகிராமைக் கொடுத்து அவுட்புட் கேட்பார்கள். இந்தக் கேள்விக்கான பதில், புத்தகத்திலேயே இருக்கிறது. இந்தக் கேள்வி எல்லா வருட கேள்வித்தாள்களிலும் தொடர்ந்து வருகிறது. 

நம்பர் போடுவதில் மாணவர்கள் செய்கிற தவறு. 

கேள்வியின் வரிசையை மாற்றி மாற்றி எழுதும்போது, கேள்விக்கான எண்ணை எழுதாமலோ, தவறான எண்ணையோ, ஒரே எண்ணை இரண்டு கேள்விகளுக்கோ எழுதிவிடுகிறார்கள். இதனால் மதிப்பெண் இழக்கும் வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கை. 

பரீட்சை

ரேகா, சிவசாமி கலாலயா, சென்னை. 

1. 30 மதிப்பெண் பிராக்டிகலுக்குப் போய்விடும். மீதம் இருக்கும் 70 மதிப்பெண்ணில் 44 மதிப்பெண் முதல் வால்யூம் சி பிளஸ் பிளஸ்-க்கும், 26 மதிப்பெண் வால்யூம் இரண்டில் இருக்கிற SQL, புல்லியன் அல்ஜீப்ரா, கம்யூனிகேஷன் டெக்னாலஜி ஆகிய சேப்டர்களுக்கும் சென்றுவிடும். சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் என்பதால், இதில் ஒருவேளை சின்னச் சின்ன மாறுதலும் ஏற்படலாம். 

2. கம்ப்யூட்டர் சயின்ஸைப் பொறுத்தவரை, முதல் வால்யூமான சி பிளஸ் பிளஸ், சில மாணவர்களுக்குக் கடினமாக இருக்கும். அவர்கள் இரண்டாம் வால்யூமை முழுதாகப் படித்துவிடுங்கள். 

3. சென்டம் எடுக்க, சி பிளஸ் பிளஸ்-ஐ முழுக்க கான்சன்ட்ரேட் செய்யுங்கள். இன்ஜினீயரிங் முதல் வருடத்தில் ஜஸ்ட் 'சி' மட்டுமே சொல்லித் தருவார்கள். ஆனால், நாங்கள் ஸ்கூல் டேஸிலேயே சி பிளஸ் பிளஸ் சொல்லித்தந்துவிடுவதால், பி.எஸ்சி., பி.சி.ஏ., பி.டெக்., இன்ஜினீயரிங் என கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட மேஜர் படிக்கப்போகும் மாணவர்கள் எல்லாருக்குமே 2 செமஸ்டர் வரை பயனுள்ளதாக இருக்கும். 

4. சில முக்கியமான கேள்விகள்... 

(அ) அவுட்புட் ரைட்டிங். 

(ஆ) ஒரு புரோகிராமில் இருக்கிற பிழைகளைக் கண்டுபிடித்து, சரிசெய்கிற எரர் ஃபைண்டிங். 

(இ) ஒரு ஃபைலில் இருக்கிற 'a' -வில் ஆரம்பிக்கிற வார்த்தைகளை எண்ணி, அதற்கு ஒரு புரோகிராம் எழுதுவது, அல்லது ஒருவரின் சம்பளம், போனஸ், வருமான வரி இவற்றையெல்லாம் கணக்கிட்டு எழுதுகிற ஃபுல் லெங்க்த் புரோகிராம். 

இந்தக் கேள்விகளும் கேட்கலாம் அல்லது இந்த மாடலில் வேறு தகவல்களுக்கும் புரோகிராம் எழுதச் சொல்லலாம். 

சிபிஎஸ்சி

5. Data structure என்றொரு யூனிட் இருக்கிறது. இதில்தான் மாணவர்கள் நிறைய தவறு செய்கிறார்கள். அதிலும், பதில் தெரியாமல் செய்கிற தவறில்லை. நன்றாகப் பதில் தெரிந்தும் கவனக்குறைவினால் செய்கிறார்கள். அதாவது, Data structure-ஐ அதற்கான விதிமுறைகளின்படி எழுதவேண்டும். ஒரு செமிகோலன் அல்லது ஒரு கமா விட்டுவிட்டாலும் அரை மதிப்பெண் அல்லது ஒரு மதிப்பெண் போய்விடும். இதனால், சென்டமைக் கோட்டைவிட்ட பல மாணவர்கள் உண்டு. எனவே, கவனமாக இருங்கள்.

பொதுத்தேர்வில் எளிதாக ஸ்கோர் அடிக்க  சில டிப்ஸ்! 


டிரெண்டிங் @ விகடன்