‘‘இந்த மாதம் நடந்த டெஸ்ட்டில், நீங்கள் எடுத்த மதிப்பெண்கள் நினைவில் இருக்கிறதா?’’ எனக் கேட்டதும், மாணவர்கள் புரியாமல் பார்த்தனர்.

‘‘அந்த மதிப்பெண்களைப் பற்றி எதுவும் புகார் சொல்ல மாட்டேன். அதைவைத்து, கணக்கு செயல்பாடுகளை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எளிமையாகச் செய்யலாம்’’ என்றதும் உற்சாகமாகத் தலையாட்டினார்கள்.

மதிப்பெண்களைக் கரும்பலகையில் எழுதச் செய்தேன். கண்டறிந்த மதிப்புகளின் கூட்டுத் தொகைக்கும், மதிப்புகளின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதமே கூட்டுச் சராசரி என்பதை விளக்கினேன். மாணவர்களின் எண்ணிக்கை, மதிப்பெண்களின் கூட்டுத் தொகையைவைத்து கூட்டுச் சராசரியைக் கண்டுபிடிக்கவைத்தேன்.
‘இடைநிலை’ என்பதற்கு, மாணவர்களிடம் எண்களைக் கொடுத்து, ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசைப்படி நிற்க வைத்தேன். அதில், இடைநிலையைக் காணச் செய்தேன். இதன் மூலம் இடைநிலை காணும்போது, ஏறுவரிசை அல்லது இறங்குவரிசையில் அமைக்க வேண்டும் என்பதை எளிமையாகப் புரிந்துகொண்டார்கள்.
- தி.முத்துமீனாள்சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.