தேவையான பொருட்கள்: சிமென்ட், சலிக்கப்பட்ட மணல், தண்ணீர், நூல் சுற்றப் பயன்படும் உருளை, இரு வெவ்வேறு அளவுள்ள பெட்டிகள், காலியான தீப்பெட்டி.

செய்முறை:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• காலியான தீப்பெட்டியில் சிறிதளவு சிமென்ட்டைப் போட்டு தேவையான அளவு நீர் சேர்த்துக் கலக்கவும்.

அதனை, சில மணி நேரம் அப்படியே விட்டுவிடவும். பின்னர் பார்க்கும்போது, சிமென்ட் தீப்பெட்டியின் வடிவில் கெட்டி அடைந்திருக்கும். இதற்கு, ‘சிமென்ட் கெட்டித்தன்மை அடைதல்’ என்று பெயர். இந்தத் தத்துவத்தைப் பயன்படுத்தி, சிமென்ட் குழாய்கள் மற்றும் தொட்டிகள் செய்கிறார்கள்.
• சிமென்ட் மற்றும் சலிக்கப்பட்ட மணல் இரண்டையும் சரியான அளவில் எடுத்துக்கொண்டு, குறைவாகத் தண்ணீர் கலந்து கலவை தயார்செய்யவும். இரு வெவ்வேறு அளவுள்ள பெட்டிகளை எடுத்துக்கொள்ளவும். பெரிய பெட்டியின் அடிப்புறத்தில், சிறிதளவு சிமென்ட் கலவையைப் போடவும். சிறிய பெட்டியை, பெரிய பெட்டியின் நடுவில் இருக்குமாறு வைக்கவும். இரண்டு பெட்டிகளுக்கும் நடுவில் உள்ள இடைவெளியில் சிமென்ட் கலவையைப் போட்டு நன்றாக அழுத்திவிடவும். சில மணி நேரம் கழித்து பெட்டிகளை எடுத்துவிடவும். இப்போது, சிமென்ட் தொட்டி தயார்.
• தொட்டிக்குள் சிறிதளவு மண்ணைப் போட்டு, ஒரு விதையை ஊன்றவும். சில நாட்கள் கழிந்ததும் விதை முளைத்து, சிறு செடியாக வளர்ந்திருக்கும்.
- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.