நமக்கு நிறையப் பழமொழிகள் தெரியும். ஆனால், ஒரு சில பழமொழிகளைத் தவிர மற்றவைக்குப் பொருளும், அது எதனை மையமாக உணர்த்துகிறது என்பதும் தெரியாது. அதனை அறிந்துகொள்ள எளிமையான செயல்பாடு ஒன்றைச் செய்ய வைக்கலாம்.

வெவ்வேறு பொருளுடைய சில பழமொழிகளைத் தனித் தனி அட்டைகளில் எழுதிக்கொள்ளவும். அந்தப் பழமொழிகள் உணர்த்தும் பொருளையும் தனித் தனி அட்டைகளில் எழுதிக்கொள்ளவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்துக்கொள்ளவும். பழமொழிகளை ஒரு குழுவுக்கும்,

பொருள் எழுதிய அட்டைகளை ஒரு குழுவுக்கும் வழங்கவும்.
தன்னிடம் உள்ள பழமொழியைப் படித்ததும், அதற்கான பொருளுடைய அட்டையை வைத்திருக்கும் மாணவர் எழுந்து, பொருளைப் படிக்க வேண்டும். இவ்வாறு மாற்றி மாற்றிச் செயல்படவைத்து மதிப்பிடலாம்.
(உ.ம்.) ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழியை ஒரு அட்டையிலும், இந்தப் பழமொழி, மக்களின் நம்பிக்கையை உணர்த்துவதால், ‘நம்பிக்கை’ என்பதை ஒரு அட்டையிலும் எழுத வேண்டும்.
இதேபோல பாடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கவிஞர் காளமேகத்தின் பாடலில் உள்ள நகைச்சுவை, யாரைக் குறிப்பிடுகிறது என்பதைக் கண்டறிய வேண்டும்.
- இரத்தின புகழேந்தி, அரசு உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி.