
மாணவர்களை பல குழுக்களாகப் பிரிக்கவும். ஒரு குழுவுக்கு விலங்குகளின் படங்களும்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இரண்டாவது குழுவுக்குப் பறவைகளின் படங்களும், மூன்றாவது குழுவுக்குப் பூக்களின் படங்களும், நான்காவது குழுவுக்குத் தாவரங்களின் படங்களும், ஐந்தாவது குழுவுக்குத் தொழில்களின் படங்களும் கொடுக்கவும்.
ஆசிரியர் ஒரு குழுவை அழைத்ததும், மாணவர்கள் தங்களிடம் உள்ள படங்களை ஐவகை நிலங்களுக்கேற்பப் பிரித்துவைக்க வேண்டும்.

உதாரணமாக, ‘தொழில்கள்’ குழுவை அழைத்தால், தொழில் சார்ந்த படங்களை வைத்திருப்பவர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலங்களுக்கான தொழில்களைப் பிரித்து ஒட்ட வேண்டும்.
குறிஞ்சி - தேன், கிழங்கு சேகரித்தல்
முல்லை - ஆடு, மாடு மேய்த்தல்
மருதம் - விவசாயம்
நெய்தல் - மீன் பிடித்தல்
பாலை - வறட்சியைத் தாங்கும் தாவரங்களை வளர்த்தல்.
மாணவர்களின் ஆர்வம் மற்றும் செயல்வேகத்துக்கு ஏற்ப மதிப்பீடு செய்யலாம்.
- மூ.சங்கீதா, அ.பெ.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.