Gender பற்றிய பகுதிக்கு, விநாடி-வினா செயல்பாடு ஒன்றைச் செய்யவைத்தேன்.

முதலில், மாணவர்களிடம் Gender பற்றி விளக்கிக் கூறினேன். பிறகு, மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தேன். ஒரு ட்ரேயில் பால் வகை உயிரினங்களின் ஆண்-பெண் (எடு: Boy, Girl, Cock, Hen, Lion, Lioness…)
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படங்களை வைத்தேன்.
கரும்பலகையில் Masculine மற்றும் Feminine gender-களைப் பிரித்தேன். முதல் குழுவில் இருந்து

ஒரு மாணவரை அழைத்து, ஒரு படத்தை எடுத்து சரியான பிரிவில் பொருத்தச் சொன்னேன். (எடு: Boy என்றால், Masculine gender பிரிவில் ஒட்டுதல்). பிறகு, இரண்டாவது குழுவில் இருந்து வந்த மாணவர், ட்ரேயில் உள்ள அதற்கு எதிர்மறையான பால் வகையை (Opposite gender) ஒட்டச் சொன்னேன்.
அடுத்த முறை, இரண்டாவது குழுவைச் சேர்ந்த மாணவர் முதலில் ஒட்ட, முதல் குழுவைச் சேர்ந்த மாணவர் சரியான பால் வகையைக் கண்டுபிடிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு குழுவாக மாறி மாறிச் செய்ய வேண்டும். இறுதியாக, அதிக மதிப்பெண் பெற்ற குழுவுக்குப் பரிசு வழங்கினேன். இந்தச் செயல்பாடு, பால் வகை பற்றிய தெளிவை மாணவர்களிடம் ஏற்படுத்த உதவியது.
- ஜி.கிறிஸ்டோபர், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.