‘Kari the Elephant’ என்ற பாடத்தின் செயல்பாடாக, மாணவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்துக்கொண்டேன்.

முதல் குழு, விபத்துகள் மற்றும் காயம் ஏற்படும் சூழலை நடித்துக்காட்டினர். உதாரணமாக,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாகனத்தில் செல்லும்போது மற்றும் உயரமான இடத்தில் இருந்து தவறி விழுவது.
அடுத்த குழு, காயம்பட்டதும் செய்யவேண்டிய முதல் உதவிகளை நடித்துக்காட்டினர். உதாரணம்: நீரில் மூழ்கியவரை தலைமுடியைப் பிடித்து இழுத்து வருதல், வயிற்றை அழுத்தி நீரை வெளியேற்றுதல்.
அடுத்த குழு, காயம்பட்டவுடன் செய்யக் கூடாதவற்றைப் பட்டியலிட்டனர். உதாரணம்: தீக்காயம் பட்டால், இங்க் ஊற்றக் கூடாது.


ஒவ்வொன்றையும் செய்யும்போது, அதை ஆங்கிலத்தில் விளக்கினர். சில இடங்களில் சரியான ஆங்கிலச் சொல் கிடைக்காமல் தடுமாறியபோது, நான் உதவினேன்.
மாணவர்களின் ஆர்வம், ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு அளித்தேன்.
- தி.ஆனந்த், ஊ.ஒ.ந.நி.பள்ளி, காளாச்சேரி மேற்கு, நீடாமங்கலம்.