
தேவையான பொருட்கள்: மூன்று கண்ணாடிக் குவளைகள், மிகக் குளிர்ந்த நீர், வெதுவெதுப்பான

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நீர், சாதாரண குழாய் நீர்.
செய்முறை: மூன்று கண்ணாடிக் குவளைகளை, மேஜையின் மீது போதிய இடைவெளிவிட்டு வைக்கவும். அதில், வெதுவெதுப்பான நீர், சாதாரணக் குழாய் நீர், மிகக் குளிர்ந்த நீர் ஆகியவற்றைத் தனித்தனியாக முக்கால் பாகம் நிரப்பவும்.
• துண்டுச் சீட்டில் அவற்றின் பெயர்களை எழுதி, வெளிப்புறத்தில் ஒட்டவும்.

• மாணவர்களை ஒவ்வொருவராக அழைக்கவும். வலது கையின் விரல்களை வெதுவெதுப்பான நீரிலும், இடது கையின் விரல்களை மிகக் குளிர்ந்த நீரிலும் சில விநாடிகள் வைக்கச் சொல்லவும். பிறகு, இரண்டு கைகளின் விரல்களையும் சாதாரணக் குழாய் நீரில் வைக்கச் சொல்லவும்.
• மூன்றாவது குவளையில் கையை வைத்தபோது உணர்ந்ததைக் கூறச் சொல்லவும்.
• மிகக் குளிர்ந்த நீரில் வைத்து எடுக்கப்பட்ட விரல்கள் அதிக வெப்பத்தையும், வெதுவெதுப்பான நீரில் வைத்து எடுக்கப்பட்ட விரல்கள் குளிர்ச்சியையும் உணர்வதாகக் கூறுவார்கள்.
• இதன் மூலம், கையால் வெப்பத்தைச் சரியாக அளக்க முடியாது என்பதை உணரலாம்.
- ப.குணசேகரன், ஊ.ஒ,ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.