
பீர்பாலைத் தெரியும்தானே? தெனாலி ராமன் போல, சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கெட்டிக்காரர். எங்கள் வகுப்பில், பீர்பால் கதையை நாடகமாக நடித்துக்காட்டினர்.
இடம்: அரசவை, பங்குபெறுவோர்: அக்பர், பீர்பால் மற்றும் சில அமைச்சர்கள்.
அரசர் திடீரென எழுந்து, தரையில் ஒரு கோடு கிழித்தார்.
அரசர்: ‘‘இந்தக் கோட்டை அழிக்காமல், இதைச் சிறியதாக்க முடியுமா?’’
அமைச்சர்கள்: ‘‘பேரரசே, கோட்டை அழிக்காமல் யாராலும் சிறியதாக்க முடியாது.’’
பீர்பால்: (கோட்டின் அருகில் அதைவிட நீளமான ஒரு கோடு வரைந்துவிட்டு) ‘‘மகாராஜா, நான் வரைந்த பெரிய கோட்டின் அருகே, நீங்கள் வரைந்த கோடு சிறியதாக ஆகிவிட்டது.’’

பீர்பாலின் அறிவாற்றலைக் கண்டு மற்ற அமைச்சர்கள் ஆச்சர்யம்கொண்டனர். அரசர், பீர்பாலைப் பாராட்டினார்.
மாணவர்களின் நடிப்புத்திறன், உச்சரிப்பு, ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யலாம்.
- மு.முத்துலெட்சுமி, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.