Published:Updated:

FA பக்கங்கள்

FA பக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
FA பக்கங்கள்

FA பக்கங்கள்

FA பக்கங்கள்

FA பக்கங்கள்

Published:Updated:
FA பக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
FA பக்கங்கள்
FA பக்கங்கள்
FA பக்கங்கள்

புதிய பத்திரிகை!

FA பக்கங்கள்

‘Deep down the ocean’ என்ற பாடத்துக்காக,  மாதிரி நாளிதழ் செய்யத் திட்டமிட்டோம். ஏ-4 தாளில், பழைய வார இதழ்கள், செய்தித்தாள்கள் ஆகியவற்றில் இருந்து செய்திகள் மற்றும் படங்களைக் கத்தரித்து ஒட்டினோம். அதை ஆசிரியரிடம் காண்பித்து, மதிப்பீடு பெற்றோம்.

- சுப்ரியா, நவீன், சரவணன், குமரன், பூவரசி, 5-ம் வகுப்பு.

ஐவகை நிலங்கள்

FA பக்கங்கள்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களை விளக்க, ஐந்து ட்ரே-க்களை எடுத்துக்கொண்டோம். களிமண், செடிகள், மணல் போன்றவற்றால் ஐவகை நிலங்களின் மாதிரிகளை உருவாக்கினோம். அவற்றைப் பற்றி விளக்கிக் கூறி, மதிப்பீடு  பெற்று மகிழ்ந்தோம்.

- தர்ஷினி, பழனி, அன்னபூரணி, நவீன், குமரன், 4-ம் வகுப்பு.

Unity is strength poem

FA பக்கங்கள்

‘ஒற்றுமையே வலிமை’ என்பதை உணர்த்தும் வகையில், இந்தியாவில் பின்பற்றப்படும் பல வகையான மக்களின் ஆடைகளை அணிந்து வந்தோம். ஒற்றுமையைப் பற்றிப் பேசி, ஆசிரியரை அசத்தி பாராட்டைப் பெற்றோம்.

3-ம் வகுப்பு மாணவர்கள்.

ஊ.ஒ.ந.நி.பள்ளி, சிக்கபடகாண்ட அள்ளி, பாலக்கோடு, தருமபுரி.

மீன் அட்டை

FA பக்கங்கள்

தமிழ் உச்சரிப்பில் ல, ள, ழ வேறுபாடு முக்கியம். இதை விளக்க, ஒரு சார்ட்டில் மீன் செய்து, அதன் மேல் செதில்களாக பேப்பரை ஒட்டினேன். செதில் மேல் ‘பல்லி’ என்றும், அதைத் திறந்தால், உள்ளே ‘பள்ளி’ என்றும் இருக்கும்படி எழுதினேன். இது, வகுப்பில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

- இ.ஸ்ரீநித்திஷ்ராஜ், 6-ம் வகுப்பு, கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.

பழமும் கிளியும்

FA பக்கங்கள்

சார்ட்டில் மரம் வரைந்தோம். அதில் உள்ள பழங்களில் கேள்விகள் இருக்கும். கிளிகளிடம்  பதில்கள் இருக்கும். ஒவ்வொரு பூவுக்கும் சரியான கிளியைப் பொருத்திக் காட்டினோம். பொருத்துக, எதிர்ச்சொல் அறிதல் ஆகியவற்றுக்கும் இதையே பயன்படுத்தலாம் எனக் கூறி, ஆசிரியர் மதிப்பீடு அளித்தார்.

- ஆ.பூங்கொடி, தாரணி, 2-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, திருப்பெயர், பெரம்பலூர்

அழகு வண்ணத்துப்பூச்சி

FA பக்கங்கள்

‘நூலகத்தில் நாம்’ பாடப் பகுதியின் பயிற்சியில் உள்ள செயல்பாடு ஒன்றைச் செய்தோம். வண்ணத்தாள்களை வெட்டி, சார்ட்டில் ஒட்டி வண்ணத்துப்பூச்சிகளை உருவாக்கினோம். அதன் மேல் ஜமிக்கிகளை ஒட்டி அழகுபடுத்தினோம்.

- ஜெ.ஜெஸினா, அ.அப்சிகா பாத்திமா, எஸ்.பரக்கத் நிஸா.

ஊ.ஒ.ந.நி.பள்ளி, ஏர்வாடி, இராமநாதபுரம்.

அறிவியல் கண்காட்சி!

எங்கள் பள்ளியில், அறிவியல் கண்காட்சியைச் சிறப்பாகச் செய்தோம். அதிலிருந்து சில:

FA பக்கங்கள்

பெரிஸ்கோப், நுரையீரலுக்குள் காற்று சென்று திரும்புவது, காற்றுக்கு எடை உண்டு ஆகியவற்றை நாங்கள் விளக்கினோம்.

வீடும் இதயமும்!

FA பக்கங்கள்

மின்கலன்களின் வகைகள், இதயம், வீடு ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கினோம். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் இது பற்றி விளக்கினோம். அப்போது, அவர்கள் எழுப்பிய வினாக்களுக்குத் தகுந்த பதில்களை அளித்தோம். நல்ல மதிப்பீடு கிடைத்தது.

7-ம் வகுப்பு மாணவர்கள், ஊ.ஒ.ந.நி.பள்ளி, கோடிஅள்ளி, தருமபுரி.

மீன் தொட்டியில் நீந்திய மீன்கள்

FA பக்கங்கள்

தெர்மக்கோலில் மீன் தொட்டியை வரைந்துகொண்டோம். வண்ணப்பேனாக்கள், வண்ணக் கோலப்பொடி ஆகியவற்றால்  அழகுபடுத்தி, உண்மையான மீன்தொட்டி போல மாற்றினோம். ஆசிரியரிடம் காண்பித்துப்  பாராட்டும் மதிப்பீடும் பெற்றோம்.

- சி.கவியரசு, சி.ஸ்ரீதேவி, ர.சந்தோஷ்குமார், மு.கோகுல், த.சுரேஷ்குமார்,  ஊ.ஒ.ந.நி.பள்ளி, பாலக்கோடு தெற்கு.

நியூரான்

FA பக்கங்கள்

நியூரான் மற்றும் கருவிழியின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை, நூல் மற்றும் பஞ்சு மூலம் செய்தோம். அதைப் பற்றிய சிறு குறிப்புகளையும் எழுதினோம். ஆசிரியர், முழு மதிப்பீடு அளித்துப் பாராட்டினார்.

- ஜீவிதா, கி.கார்த்திகேயன், 8-ம் வகுப்பு.

வாழ்வியல் கணிதம்

FA பக்கங்கள்

‘வாழ்வியல் கணிதம்’ பாடத்துக்காக தோழிகள் இணைந்து செயல்பாடு ஒன்றைச் செய்தோம். சதவிகிதத்தை விளக்கும் செயல்பாட்டில், ஒருவர் கட்டங்கள் வரைவது, இன்னொருவர் வண்ணம் தீட்டுவது, மூன்றாமவர் குறிப்புகள் எழுதுவது என விரைவாகச் செய்து முடித்தோம்.   

- அ.மகாலட்சுமி, மனோ ஜெகஸ்ரீ , வர்ஷினி, 7-ம் வகுப்பு.

முக்கோண வகைகள்

FA பக்கங்கள்

இரு பக்கங்களின் கூட்ட அளவுகள், மூன்றாவது பக்கத்திற்கு சமம் எனும் செங்கோண முக்கோணப் பண்பை  விளக்கும் செயல்பாடைச் செய்தோம். கறுப்பு நிற சார்ட்டில், செங்கோண முக்கோணங்களை க்வில்லிங் (Quilling) ஷீட்டில் செய்தோம். அதேபோல பல வகையான முக்கோணங்களையும் செய்து ஆசிரியரிடம் விளக்கி, மதிப்பீடு பெற்றோம். 

- கனகசுந்தரம், கவியரசு, 6-ம் வகுப்பு.

 ஊ.ஒ.ந.நி.பள்ளி, இரமணமுதலிபுதூர், ஆனைமலை, கோவை.

கவிப் பூக்கள்

FA பக்கங்கள்

தமிழ்க் கவிஞர்களின் குறிப்புகளைப் பழைய சி.டி-க்கள், அட்டை மற்றும் குச்சிகள் மூலம் பூக்களை உருவாக்கி, இதழ்களில் கவிஞர்களின் குறிப்புகளை எழுதினோம். இந்தக் கவிப் பூக்களுக்காக, தமிழ் அம்மாவிடம் பாராட்டும் பரிசும் பெற்றேன்.

- ஆர்.யுவராணி, 7-ம் வகுப்பு.

பனி மனிதன்!

‘சூழ்நிலை மண்டலம்’ பாடத்துக்காகப் பஞ்சு, பந்து, வெல்வெட் பேப்பர் மற்றும் ஐஸ்குச்சிகளால் பனி மனிதனைச் செய்தேன்.

- இ.சாருமதி, 7-ம் வகுப்பு

FA பக்கங்கள்

பென் ஹோல்டர்!

காலியான செல்லோஃபன் டேப் வளையங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிச் செய்த பென் ஹோல்டரை, ‘அழகிய படைப்பு’ எனப் பாராட்டிய ஆசிரியர், மதிப்பீடுகளை அளித்தார்.

- வி.தமிழ்ச்செல்வி, 6-ம் வகுப்பு

புல்வெளி, பாலைவனம்

FA பக்கங்கள்

‘சூழ்நிலை மண்டலம்’ பாடத்துக்காக, புல்வெளி அமைப்பு செய்து, அங்கு வாழும் விலங்குகளின் பொம்மைகளைப் பொருத்தினேன். மணலால் பாலைவனப் பிரதேசம் உருவாக்கி, அதில் வாழும் விலங்குகளையும் தாவரங்களையும் பொருத்தினேன். சூப்பரான மதிப்பீடு பெற்றேன்.

- கி.வேண்டா, 7-ம் வகுப்பு.

தாவரத்தில் தமிழ்ச்சொல்!

FA பக்கங்கள்

தாவரம், செடி அமைப்புகளை வரைந்து, வெட்டியெடுத்து வண்ணமிட்டேன். அதில், ஒரு புறம் உள்ள இலைகளில் பிறமொழிச் சொற்களையும், மறுபுற இலைகளில் அதன் தமிழ்ச் சொற்களையும் எழுதினேன். பாராட்டும் மதிப்பீடும் பெற்றேன்.

- பி.உமாதேவி, 7-ம் வகுப்பு.

மயில்

இணைச் செயல்பாட்டுக்காக சேகரித்த தோகைகள், வெல்வெட் பேப்பர் ஆகியவற்றைப் பயன்படுத்தி, அழகான மயில் செய்துகாட்டி, வளமான மதிப்பீடு பெற்றேன்.

- எஸ்.ரேவதி, 7-ம் வகுப்பு.

FA பக்கங்கள்

அழகுக் கட்டடம்!

‘விஜயநகரப் பாமினி அரசுகள்’ பாடத்துக்காக,  கோல்கும்பாஸ் கோட்டையை அட்டைகளை வெட்டி வளைத்துச் செய்தேன்.

- எம்.ரம்யா, 7-ம் வகுப்பு.

புராஜெக்ட் திருவிழா!

FA பக்கங்கள்

எஃப்.ஏ புராஜெக்ட் செய்த நண்பர்கள், அனைவரும் ஒன்றுகூடி, தாங்கள் செய்த செயல்பாடுகளைப் பகிர்ந்துகொண்டோம். இறுதியில், நாங்கள் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

இதைப் பார்த்த ஆசிரியர், “இன்று என்ன புராஜெக்ட் திருவிழாவா?” என்று சந்தோஷமாகக் கேட்டுப் பாராட்டினார். 

- எஸ்.ரேணுகா, எஸ்.அஸ்வினி 7-ம் வகுப்பு.

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கண்ணமங்கலம்.

 தபால்பெட்டி!

FA பக்கங்கள்

இணைச் செயல்பாடாக சார்ட்டை வெட்டி, சூப்பரான தபால்பெட்டி செய்தேன். அதில், எந்த ஊர் தபால்பெட்டி என்பதைத் தெரிவிக்கும் அஞ்சல் குறியீட்டு எண்ணை எழுதினேன். பிறகு, எனது ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதி, அதில் அஞ்சல் செய்தேன். இதைப் பார்த்த ஆசிரியர் பாராட்டி, நல்ல மதிப்பீடு அளித்தார்.

- டி.குணசேகரன், 9-ம் வகுப்பு.

பனிப் பொழிவுக் காட்சி!

FA பக்கங்கள்

கறுப்பு சார்ட்டில், மரங்கள், பறவைகள்   உருவங்களை வெட்டி, எண்ணெய் தடவிய வெள்ளை சார்ட்டில் ஒட்டிச் சுற்றிக்கொண்டேன். அதனுள் டார்ச்சை அடிக்க, பனிப்பொழிவு போல அழகான காட்சி தெரிந்தது. அது எனக்கு மதிப்பீட்டைப் பெற்றுத்தந்தது.

- பி.சுதர்சன், 9-ம் வகுப்பு.

மூலிகைச் செடிகள்!

FA பக்கங்கள்

எங்கள் பள்ளியைச் சுற்றி இருக்கும் மூலிகைச் செடிகளைச் சேகரித்து வந்தேன். அவற்றை நோட் புக்கில் ஒட்டி, அவற்றின் பெயர்களை எழுதினேன். வகுப்பறையில் எல்லோரும் பார்க்கும்படி வைத்து, மாணவர்கள் தாங்கள் பார்க்கும் மூலிகைச் செடிகளைப் பட்டியலிடலாமே எனும் யோசனையையும் சொன்னேன். நல்ல மதிப்பீடு பெற்றேன்.

- அறிவுச்செல்வன், 9-ம் வகுப்பு.

உடைகளில் தெரியும் பண்பாடு!

FA பக்கங்கள்

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதே நம் நாட்டின் சிறப்பு. அதை விளக்க, பல்வேறு மாநில கலாசார உடைகளை அணிந்து வந்தோம்.   உணவுப் பழக்கங்கள், உடை, இசை ஆகியவற்றில் இருக்கும் வகைகளை விளக்கிக் கூறி, மதிப்பீடு பெற்றோம்.

3-ம் வகுப்பு மாணவர்கள், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பெரிய குக்குண்டி, ஆற்காடு, வேலூர் (மா).

படம் ஒட்டி, மதிப்பீடு பெற்றோம்!

FA பக்கங்கள்

‘விண்வெளிப் பயணம்’ பாடத்துக்காக,  செயற்கைக்கோள்கள் பற்றிய படத்தொகுப்பை நண்பர்களோடு செய்தோம். அறிவியல் விஞ்ஞானிகள், விண்கலன்கள், விண்வெளித் தளங்கள் உள்ளிட்ட படங்களைச் சேகரித்து, சார்ட்டில் ஒட்டி, மதிப்பீடு பெற்றோம்.

மு.முகேஷ், கு.செந்தில்ராஜா,கி.சமயராஜ், க.ரோஹித்,5-ம் வகுப்பு.

அறிஞர்களும் கண்டுபிடிப்புகளும்

FA பக்கங்கள்

‘அறிஞர்களை அறிவோம்’ எனும் பகுதிக்காக, புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அறிஞர்களைப் பட்டியலிட்டேன். அவர்களின் படங்களைச் சேகரித்து சார்ட்டில் ஒட்டினேன். அதன் அருகில், அவர்களின் கண்டுபிடிப்புப்  பொருட்களையும் சிறிய படங்களாக ஒட்டினேன். இவற்றின் கீழ், கண்டுபிடித்த கண்டுபிடிப்பை எழுதினேன். என் ஆர்வத்துக்கும் முயற்சிக்கும், ஆசிரியரின் பாராட்டும் மதிப்பீடும் கிடைத்தன.

- மூ.தனசீலன், 5-ம் வகுப்பு, டாக்டர் டி. திருஞானம் தொ.பள்ளி, மதுரை.

 நுரையீரலும் ஊசலும்!

பஞ்சு, ஸ்ட்ரா ஆகியவற்றால் நுரையீரல் மாதிரியை உருவாக்கினேன். நுரையீரல் செயல்படும் விதத்தை விளக்கினேன்.

FA பக்கங்கள்

ஊசலில் விசை செயல்படும் விதத்தை விளக்க, பிளாஸ்டிக் பந்தை நூலில் கட்டி, ஊசலாடும் விதமாக அட்டையில் இணைத்தேன். எந்த அளவு விசை தருகிறோமோ, அந்த அளவுக்குப் பந்து செல்வதைக் கூறினேன்.

- நித்யா, பரமேஸ், 7-ம் வகுப்பு.

புறாவிலிருந்து மெயில் வரை!

FA பக்கங்கள்

தகவல் பரிமாற்றம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது என்பதை விளக்கும் சூப்பரான செயல்பாடு ஒன்றைச் செய்தேன். புறாவிலிருந்து இப்போது பயன்படுத்தப்படும் மெயில் வரை, இடைப்பட்ட காலத்தில் என்னவெல்லாம் தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டதோ, அவற்றின் படங்களைச் சேகரித்தேன். கால வரிசைப்படி ஒட்டி, ஆசிரியரிடம் காண்பித்து மதிப்பீடு பெற்றேன்.

- கீதாமணி, 8-ம் வகுப்பு

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுப்பராயன்புதூர், கோவை.

தொகுப்பு: வி.எஸ்.சரவணன்

FA பக்கங்கள்