
படத்தில் காட்டியிருப்பது போல அட்டைகளைத் தயார்செய்யவும். B அட்டையின் கிழிக்கப்பட்ட பகுதியில், A அட்டையை நுழைக்க வேண்டும். ஒவ்வோர் எழுத்தைப் பொருத்தும்போதும் புதிய வார்த்தை கிடைக்கும்.
கூட்டம், ஆட்டம், திட்டம், சட்டம்...


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுபோன்று முதல் எழுத்தை மட்டும் மாற்றி அமைத்து, ஒரே மாதிரி ஓசையுடைய சொற்களை

உருவாக்கலாம்.
மாணவர்களிடம் இதுபோன்ற அட்டைகளைக் கொடுத்து, விளையாட்டு முறையில் மதிப்பீடு செய்யலாம். வகுப்பறையில் விறுவிறுப்பான போட்டியும் நடத்தலாம். குறைந்த நேரத்தில் யார் அதிக சொற்களை உருவாக்கி, படித்தும் எழுதியும் காட்டுகிறார்களோ, அவரையே வெற்றிபெற்றவர் என அறிவிக்கலாம்.
கற்றலில் மெள்ள மலரும் மாணவர்களும் இந்த விளையாட்டில் ஆர்வமுடன் கலந்துகொள்வர்.
- மூ.சங்கீதா, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கண்ணமங்கலம்.