
‘பசுமை உலகம்’ பாடத்துக்கு உரியது.

மாணவர்களிடம் பலவிதப் பூக்களை கொண்டுவரச் சொல்லவும். அவர்களை மூன்று குழுக்களாகப் பிரிக்கவும்.
செம்பருத்திப் பூவில் ஆண் பகுதியான மகரந்தம் குறித்துக் கலந்துரையாடி, அதைப் பூவில் இருந்து பிரித்து எடுக்கச் சொல்லவும். இது, முதல் குழுவின் பணி.


இரண்டாவது குழுவை, பூவின் பெண் பகுதியான, சூலகம் குறித்துக் கலந்துரையாடி,

பிரித்துக் காட்டச் சொல்லவும்.
மூன்றாவது குழுவிடம், வெவ்வேறு பூக்களைக் கொடுத்து கலந்துரையாடச் சொல்லவும். தன் மகரந்தச் சேர்க்கை (அதே பூ), அயல் மகரந்தச் சேர்க்கையை (ஒரே மாதிரி மலர் மற்றொரு செடி) பற்றி விளக்கச் சொல்லவும்.
இதேபோல நீரில், நிலத்தில் வாழும் விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவற்றையும் இனம் காண வைக்கலாம். மாணவர்களின் ஆர்வம், பகுத்துப் பிரிக்கும் திறன் அடிப்படையில் மதிப்பீடு வழங்கலாம்.
- க.சரவணன், டாக்டர் டி.திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை.