FA பக்கங்கள்
Published:Updated:

மீன்கொடிப் பாண்டியனே!

மீன்கொடிப் பாண்டியனே!
பிரீமியம் ஸ்டோரி
News
மீன்கொடிப் பாண்டியனே!

‘சங்க காலம்’ பாடத்துக்கு உரியது.

மீன்கொடிப் பாண்டியனே!

மூவேந்தர்களின் கொடி, பூ, தலைநகர் ஆகியவற்றை நினைவில் வைத்துக்கொள்ள ஓரு செயல்பாடு.

மாணவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்து, சேர, சோழ, பாண்டியர்களின் பெயர்களை அளித்தேன். ஒவ்வொரு குழுவும் தனக்கு உரிய வேந்தரின் கொடி, பூ, தலைநகர் ஆகியவற்றை எழுதிய அட்டைகளைத் தயார்செய்தார்கள். ஒவ்வொரு குழுவிலும் ஒருவர், ராஜா போல கிரீடம் அணிந்து வரவேண்டும்.

மீன்கொடிப் பாண்டியனே!

பின்பு, ஒவ்வொரு குழுவாக வந்து, தாங்கள் உருவாக்கிய அட்டைகளைப் பற்றி விவரித்துக் கூற வேண்டும்.

மீன்கொடிப் பாண்டியனே!

மற்ற மாணவர்கள் சந்தேகம் எழுப்பினால், பதில் சொல்ல வேண்டும்.

மீன்கொடிப் பாண்டியனே!



அடுத்து, எல்லா அட்டைகளையும் மேஜை மீது வைத்துவிட்டு, மூன்று குழுக்களிலும் இல்லாத மாணவரை அழைத்து, ஓர் அட்டையை எடுக்கச் சொல்ல வேண்டும். அவர் எடுத்த அட்டைக்கு உரிய அரசு எது என்பதைச் சரியாகச் சொல்ல வேண்டும். உதாரணமாக, ‘மீன் கொடி’ வரைந்த அட்டையை எடுத்தால், பாண்டிய நாடு எனச் சரியாகச் சொல்லிவிட்டால், பாண்டியர் குழுவுக்கு மதிப்பீடு கிடைக்கும்.

- ஜி.கிறிஸ்டோபர், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.