Published:Updated:

தாவரம் தரும் ஆரோக்கியம்!

தாவரம் தரும் ஆரோக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
தாவரம் தரும் ஆரோக்கியம்!

‘தாவரங்களின் உலகம்’ பாடத்துக்கு உரியது.

தாவரம் தரும் ஆரோக்கியம்!

‘தாவரங்களின் உலகம்’ பாடத்துக்கு உரியது.

Published:Updated:
தாவரம் தரும் ஆரோக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
தாவரம் தரும் ஆரோக்கியம்!
தாவரம் தரும் ஆரோக்கியம்!

“நேற்று யாரெல்லாம் பள்ளிக்கு வரவில்லை?” என்று கேட்டதும், ஐந்து மாணவர்கள் எழுந்து நின்றார்கள். அதில் மூன்று பேர், உடல்நிலை சரியில்லாததால் விடுமுறை எடுத்திருந்தார்கள்.

தாவரம் தரும் ஆரோக்கியம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“உடல் ஆரோக்கியத்துக்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவு முக்கியமானது. நம்மைச் சுற்றி இருக்கும் பல தாவரங்கள், மருத்துவக் குணம் மிக்கவை. அவற்றை தெரிந்துகொள்ளுங்கள்” என்று சொல்லி, தாவரங்களையும் அதன் குணங்களையும் பட்டியல்   தயாரிக்கச் சொன்னேன்.

1. நெல்லி - வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்.

தாவரம் தரும் ஆரோக்கியம்!


2. துளசி - சளியை அகற்றும், காய்ச்சல் நீக்கும்.

3. கீழாநெல்லி - மஞ்சள் காமாலையைத் தடுக்கும்.

4. வேம்பு - கிருமிநாசினி, குளிர்ச்சி தரும். வயிற்றுப் பூச்சியை நீக்கும்.

தாவரம் தரும் ஆரோக்கியம்!



5. பிரண்டை - உணவைச் செரித்து, பசியைத் தூண்டும்.

6. மஞ்சள் - கிருமி நாசினி, புற்றுநோயைத் தடுக்கும்.

7. இஞ்சி - செரிமானக் கோளாறுகளை நீக்கும்.

8. மிளகு - தொண்டைக் கரகரப்பை நீக்கும்.

இவ்வாறு தயாரித்த பட்டியல் மூலம், தாவரங்களின் மருத்துவக் குணம், உடல் ஆரோக்கியம் பற்றி விளக்கினேன்.

- ந.ஸ்ரீதர், சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.படங்கள்: எஸ். சாய் தர்மராஜ்