Published:Updated:

கணங்களை எழுதும் முறை அறிவோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கணங்களை எழுதும் முறை அறிவோம்!
கணங்களை எழுதும் முறை அறிவோம்!

‘கணங்கள்’ பாடத்துக்கு உரியது.

பிரீமியம் ஸ்டோரி
கணங்களை எழுதும் முறை அறிவோம்!

‘வென்’ படத்தைப் பயன்படுத்தி, கொடுக்கப்பட்ட கணங்களை விவரித்தல் முறை, கணக் கட்டமைப்பு முறை மற்றும் பட்டியல் முறையில் குறிப்பிட வேண்டும் என்பது கணச் செயல்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரு செயல்பாடு.

கணங்களை எழுதும் முறை அறிவோம்!

A என்ற வட்டத்தில் உள்ள எண்கள் 2, 3, 5, 7, 11, 13, 17, 19 ஆகும். இவை, அனைத்துமே பகா

கணங்களை எழுதும் முறை அறிவோம்!

எண்கள். அதுவும் 20 எண்ணைவிட குறைவான பகா எண்கள். இப்படி விவரிப்பதே, விவரித்தல் முறை என விளக்கிட வேண்டும்.

விவரித்தல் முறை: A என்பது 20 எண்ணைவிட குறைவான பகா எண்களின் கணம்.

பட்டியல் முறை: A = {2, 3, 5, 7, 11, 13, 17, 19}

அடுத்து, ஒரு கணத்தை, கணக் கட்டமைப்பு முறையில் எப்படி எழுதுவது என்பதை கீழ்க்கண்டவாறு எழுத்திக் காண்பித்து, அது போல மற்றவற்றை மாணவர்களே எழுதிட உதவலாம்.

கணக் கட்டமைப்பு முறை: A= {x:x என்பது ஒரு பகா எண் x < 20 }

இதுபோல மற்ற கணங்களுக்கான செயல்பாடுகளைச் செய்யவைத்து மதிப்பிடலாம்.

- இரத்தின புகழேந்தி, அரசு உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு