
நீரும்,காற்றும் உரையாடுவதைப் போன்ற ஒரு வில்லுப்பாட்டுக் கச்சேரியை நடத்தினோம்.
நீர்: "தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட - ஆமா...


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வில்லினில் பாட வந்தருள்வாய் கலைமகளே - வணக்கம் வணக்கம் வணக்கம்!
மரம் வளர்ப்போம்; மரம் வளர்ப்போம்.
மரம் மண்ணில் நட்டால், மழை மண்ணில் விழும்.
மழை மண்ணில் வீழ்ந்தால், நம் துன்பம் தீரும்."
காற்று: "என்ன நீர் அக்கா, பாட்டு பலமா இருக்கு. ஆனா, சந்தோஷமாப் பாடுற மாதிரி தெரியலையே!"

நீர்: "உண்மைதான். இந்த மனிதர்கள், மரங்களை வெட்டிவிடுவதால் மழை குறைந்துவிட்டது. நீர் நிலைகளில் நானும் குறைந்துவிட்டேன். இருக்கும் நீர்நிலைகளிலும் குப்பை, நெகிழிப்பைகள், நெகிழிப்புட்டிகள், தொழிற்சாலைக் கழிவுநீரும் கலந்து சாக்கடை போல ஆகிவிட்டது.''
காற்று: "ஆமாம் அக்கா, நீங்கள் சொல்வது நிஜம்தான். என்னைப் பாருங்களேன். தூசு, புகை இவற்றால் நானும் மாசடைந்துவிட்டேன். நாம் மாசடைவதால் எத்தனை வியாதிகள் ஏற்படுகின்றன. இதெல்லாம் ஏன் மனிதர்களுக்குப் புரியவில்லை?"
நீர்: "கவலைப்படாதே தங்கையே, மக்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள். நம்மை மாசுபடுத்துவதை நிறுத்துவார்கள். அவர்களை நம்புவோம். தூய்மை பெறுவோம். மக்களையும் நலமுடன் வாழவைப்போம்."
காற்று: "நீர், நிலம், காற்றை என்றும் காத்திடுங்கள்; வளமான வாழ்வை சிறப்பாக வாழ்ந்திடுங்கள். நன்றி நன்றி நன்றி!"
- என்.பரிதாஜான், ஊ.ஒ.தொ.பள்ளி, பாலக்கோடு (தெற்கு), தருமபுரி.