
சூரியகிரகணம் நிகழும்போது பூமி நடுவே வருமா... சந்திரன் நடுவே வருமா?


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தச் சந்தேகம் மாணவர்களுக்கு அடிக்கடி வரும். இதைத் தெளிவாக்கும் விதத்தில், ஒரு செயல்பாடைச் செய்யவைத்தேன்.
சார்ட்டில் மூன்று வட்டங்களை வெட்டி, அவற்றில் சூரியன், சந்திரன், புவி எனப் பெயர்களைக்

குறிக்கவைத்தேன். வட்டங்களை வெட்டும்போது கிடைத்த வால் போன்ற சார்ட் பகுதியின் ஒரு புறத்தில், சூரியகிரகணம் என்றும், மறுபுறத்தில் சந்திரகிரகணம் என்றும் எழுதச் சொன்னேன்.
சூரியன் மற்றும் புவி வட்டங்களுக்கு இடையே சந்திரனை வரச் செய்து, பின்னால் சூரியகிரகண அட்டையைப் பிடிக்கச் சொன்னேன். இதுவே, சூரியகிரகணம்.
சந்திரன் மற்றும் சூரியன் வட்டங்களைப் பிடித்தவாறு இருவர் நிற்க, அவர்களின் நடுவே, புவி வட்டத்தைப் பிடிக்கச் செய்ததும், இவர்களுக்குப் பின்னால் சந்திரகிரகண அட்டையைப் பிடிக்கச் சொன்னேன்.
மாணவர்களின் குழப்பம் தீர்ந்தது. இதேபோல
உங்கள் வகுப்பிலும் செய்யலாமே!
- நா.கிருஷ்ணவேணி,ஊ.ஒ.ந.நி.பள்ளி, நல்லம்பாக்கம்.