Published:Updated:

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!

சென்னை: தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணி, அதற்காக அமைக்கபப்ட்ட முகாம்களில்  இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய்து.

தமிழகத்தில் போலியோவை முற்றிலும் ஒழிக்க, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2 தவணைகளில் 'பல்ஸ் போலியோ சொட்டு மருந்து' கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி 20 (இன்று)மற்றும் பிப்ரவரி 24 ஆகிய தேதிகளில் சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி முதல் தவணைக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.இது மாலை 5 மணி வரை நடைபெறும். 

##~~##
இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனைகள்,சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 40 ஆயிரம் சிறப்பு போலியோ சொட்டு மருந்து மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர, பயணம் செய்பவர்கள் வசதிக்காக முக்கியமான பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள்,விமான நிலையங்களில் 1,013 நகரும் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
மேலும் தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 771 நடமாடும் குழுக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலியோ சொட்டு மருந்து முகாம் பணியில் அரசு,அரசு சாரா பணியாளர்கள், ரோட்டரி இன்டர்நேஷனல் மற்றும் அரிமா சங்கங்களை சேர்ந்த 2 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.