Published:Updated:

டி.என்.பி.எஸ்.சி. அட்டவணை ஜன். 28 ல் வெளியீடு!

டி.என்.பி.எஸ்.சி. அட்டவணை ஜன். 28 ல் வெளியீடு!
டி.என்.பி.எஸ்.சி. அட்டவணை ஜன். 28 ல் வெளியீடு!
டி.என்.பி.எஸ்.சி. அட்டவணை ஜன். 28 ல் வெளியீடு!

சென்னை: 2013 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான  அட்டவணை வருகிற 28 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் நட்ராஜ், இந்தாண்டு  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள அனைத்துத் தேர்வுகளுக்கான  பட்டியலும் வருகிற 28 ஆம் தேதி வெளியிடப்படும் என்றார்.

##~~##
நடந்து முடிந்த வி.ஏ.ஓ. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று 2 ஆம் கட்ட  கலந்தாய்வு நடத்தப்படுகிறது. வி.ஏ.ஓ. கலந்தாய்வுக்கு 866 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் அவர்களில் 450 பேர் மட்டுமே இன்று கலந்தாய்வுக்கு வந்துள்ளனர்.
3 ஆம் கட்ட வி.ஏ.ஓ. கலந்தாய்வு வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என்றும் நட்ராஜ்  தெரிவித்துள்ளார்.