
ஒழுங்கற்ற பொருளின் கன அளவு காண, பின்வரும் சோதனையைச் செய்யவைத்து, மதிப்பீடு வழங்கலாம்.
தேவையான பொருட்கள்: அளவு ஜாடி, நீர், நூல், சிறு கல்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
செய்முறை: அளவு ஜாடியில் நீரை எடுத்துக்கொண்டு, நீரின் முதல் அளவைக்

குறித்துக்கொள்ளவும்.
நூலில் கல்லை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு, ஜாடியின் நீரில் மூழ்குமாறும் ஜாடியின் பக்கங்களைத் தொடாதவாறும் கல்லை இறக்கவும்.
நீர்மட்டம், முன்பு இருந்ததைவிட, தற்போது உயர்ந்து காணப்படும். இந்த அளவைக் குறித்துக்கொள்ளவும்.
இரண்டு அளவுகளின் வித்தியாசமே, ஒழுங்கற்ற வடிவம்கொண்ட கல்லின் கன அளவு ஆகும்.
மாணவர்களின் ஆர்வம், அளவுகளைத் துல்லியமாகக் கணக்கீடுசெய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு அளிக்கலாம்.
- கு.சந்திரகலா பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்.