
‘சார்பெழுத்துகள்’ பகுதிக்கு உரியது.

சார்பெழுத்துகள் பத்தையும் நினைவில்வைக்க, சூப்பரான செயல்பாடு செய்தோம்.சார்பெழுத்தின் 10

வகைகளையும் தனித்தனி அட்டைகளில் எழுதிக்கொண்டோம். சார்பெழுத்துக்குரிய

எடுத்துக்காட்டுகளைத் தனித் தனி அட்டைகளில் எழுதிவைத்தோம். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு சார்பெழுத்தின் பெயரைச் சூட்டினோம். சார்பெழுத்துப் பெயர் உடையவர், அந்த அட்டையை பேட்ச்போல தன் சட்டையில் குத்திக்கொள்ள வேண்டும். பிறகு, கரும்பலகையில் ஒரு வார்த்தை எழுதியதும், வகுப்பு மாணவர்களில் முதலில் யார் கை தூக்குகிறாரோ அவரை அழைத்து, எழுதப்பட்ட வார்த்தைக்கு உரிய சார்பெழுத்து மாணவர் அருகில் சென்று நிற்கச் செய்தோம். (எ.கா: நாடு என்ற சொல் எழுதினால், ‘குற்றியலுகரம்' மாணவர் அருகே நிற்க வேண்டும்.)
விரைவாக சார்பெழுத்து வகையைக் கண்டறிவதை வைத்து, மதிப்பீடு அளிக்கலாம்.
- மு.முத்துலெட்சுமி, சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.