Published:Updated:

என் பெற்றோர்தான் ரோல் மாடல்: மாணவி பிரேமா

என் பெற்றோர்தான் ரோல் மாடல்: மாணவி பிரேமா
என் பெற்றோர்தான் ரோல் மாடல்: மாணவி பிரேமா
என் பெற்றோர்தான் ரோல் மாடல்: மாணவி பிரேமா

சென்னை: சிஏ (ஆடிட்டர்) தேர்வில் நாட்டிலேயே முதல் இடம் பிடித்த மும்பை தமிழ் மாணவி பிரேமா தன் பெற்றோர்தான் தனக்கு ரோல் மாடல் என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டு சிஏ தேர்வில் நாட்டிலேதே முதல் இடம் பிடித்த மும்பையை சேர்ந்த தமிழ் மாணவி பிரேமாவுக்கு எண்ணூர் துறைமுக கழகம் சார்பில் ரூ.5 லட்சம் அளிக்கப்படும் என்று கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி, பிரேமாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுர் தொகை வழங்கும் விழா, சென்னையில் இன்று நடந்தது.

விழாவுக்கு தலைமை வகித்து, பரிசு தொகையை வழங்கி ஜி.கே.வாசன் வாழ்த்தி பேசுகையில், ‘‘கடின உழைப்பால் எந்த சிகரத்தையும் எட்ட முடியும் என்பதற்கு பிரேமா பெற்றுள்ள வெற்றி எடுத்துக்காட்டாக உள்ளது. அவரது வெற்றிப் பயணம் தொடரட்டும்’’ என்றார்.

எண்ணூர் துறைமுக தலைவர் பாஸ்கராச்சார் பேசுகையில், ‘‘நானும் சிஏ பட்டதாரிதான். அந்த படிப்பின் கஷ்டங்கள் எனக்கு தெரியும். இதில் வெற்றி பெற சாதாரண முயற்சி எல்லாம் போதாது. கடின முடியற்சி எடுத்தால்தான் பாஸ் ஆகலாம். ஆனால், இந்த மாணவி நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளார் என்றால் அவரின் உழைப்பை எண்ணிப்பாருங்கள்’’ என்றார்.

முடிவில் பேசிய ஆடிட்டர் பிரேமா, ‘‘எனக்கு 2 வயது இருக்கும் போதே குடும்பத்தோடு மும்பைக்கு வந்துவிட்டோம். மும்பை மாநகராட்சி பள்ளியில் தான் பிளஸ் டூ வரை படித்தேன். பிகாம் படிப்பில் மும்பை பல்கலைக் கழகத்தில் 2ம் இடம் பிடித்தேன். இளம் வயதிலேயே கஷ்டத்தை அனுபவித்தோம். அதையே சவாலக நினைத்து படித்தேன்.

சிஏ படிப்பின் கஷ்டத்தை எனது தோழிகள் கூறினார்கள். எனது அப்பா ஆட்டோ ஓட்டித்தான் எங்களை இந்த அளவுக்கு வளர்த்தார். எனது பெற்றோர்தான் எனக்கு ரோல் மாடல். கடின உழைப்பை சவாலாக எடுத்தேன். வெற்றி கிடைத்தது. நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் ஆவேன் என்று நினைத்தேன். முதல் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.’’ என்றார்.

பிரேமாவின் அப்பா ஜெயக்குமார் கூறுகையில், ‘‘1990ம் ஆண்டு பஞ்சம் பட்டினி காரணமாக விழுப்புரம் மாவட்டம் பெரியகிள்ளியூரில் இருந்து மனைவி லிங்கம்மாள், மகள்கள் மகாலட்சுமி, பிரேமா, மகன் தன்ராஜ் ஆகியோரோடு மும்பை சென்றோம். விவசாயம் செய்ய முடியாததால் பிழைப்பு தேடி குடிபெயர்ந்தோம். அங்கு ஆட்டோ ஓட்டுகிறேன். எனது மகள் படைத்துள்ள சாதனை எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது’’ என்றார்.

இந்த பரிசு தொகையை வாங்க ஜெயக்குமார், பிரேமா ஆகியோர் விமானத்தில் சென்னை வந்தனர். அவர்கள் வந்து போக ஆகும் செலவை எண்ணும் துறைமுகம் ஏற்றுக் கொண்டிருந்தது.