
பூமியின் உள் அமைப்பானது மேல் ஓடு, புவியுறை, வெளிப்பாறைக் குழம்பு, உள்பாறைக் குழம்பு என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதை, மாணவர்கள் நன்கு புரிந்துகொள்ள, எளிமையான செயல்பாடு ஒன்றைச் செய்யலாம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தேங்காய், வேகவைக்கப்பட்ட பருப்பு மற்றும் கோலிக்குண்டு ஆகியவற்றின் மூலம் மாதிரியை அமைத்து, செயல்பாட்டை விளக்கலாம். தேங்காய் மூடியின் உள்ளே நன்கு

வெந்த பருப்பை ஒரு படலமாகப் பூசவும். பிறகு, நடுப்பகுதியில் கோலிக்குண்டை வைக்கவும்.
1. தேங்காயின் மேல் ஓடு - மேல் ஓடு (Crust)
2. தேங்காய்ப் பருப்பு உள்ள பகுதி - புவியுறை (Mantle)
3. பருப்புப் படலப் பகுதி - வெளிப்பாறைக் குழம்பு (Outer core)
4. கோலிக்குண்டு உள்ள இடம் - உள்பாறைக் குழம்பு (Inner core)
இனி, பூமியின் அடுக்குகள் பற்றி எப்போது கேட்டாலும், மாணவர்களின் மனதில் இந்தத் தேங்காய் ஓடு வரும். எப்போதுமே மறக்க மாட்டார்கள்.
- என்.பரிதாஜான், ஊ.ஒ.தொ.பள்ளி, பாலக்கோடு தெற்கு, தருமபுரி.