Published:Updated:

விசை செயல்படுதல்!

விசை செயல்படுதல்!
பிரீமியம் ஸ்டோரி
News
விசை செயல்படுதல்!

‘விசையும் அழுத்தமும்’ பாடத்துக்கு உரியது.

விசை செயல்படுதல்!

விசையின் அழுத்தத்தை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ள, செயல்பாடு ஒன்றைச் செய்யலாம்.
மேசையின் மீது நாளிதழ் காகிதங்கள் மூன்றை  வைக்கவும்.

விசை செயல்படுதல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதல் காகிதத்தின் மீது, ஒரு செங்கல்லை கிடைமட்டமாகப் படுக்கவைக்கவும்.

விசை செயல்படுதல்!

இரண்டாவது காகிதத்தில், ஒரு செங்கல்லை கிடைமட்டமாகப் பக்கவாட்டில் வைக்கவும். மூன்றாவது காகிதத்தின் மீது ஒரு  செங்கல்லை, செங்குத்தாக நிற்கவைக்கவும்.

இரண்டு மாணவர்கள் எதிரெதிராக நின்றுகொண்டு, செங்கல் வைக்கப்பட்ட காகிதத்தை இருபுறமும் தூக்க வேண்டும். முதல் வகைச் செங்கல்லை சுலபமாகவும் இரண்டாவது வகைச் செங்கல்லை சிரமப்பட்டும் தூக்கமுடிகிறது. ஆனால், மூன்றாவது செங்கல்லைத் தூக்க மிகுந்த சிரமப்படவேண்டும். காரணம் தெரியுமா?

விசை செயல்படுதல்!

படுக்கைவாட்டில் இருக்கும் செங்கல் உள்ள தாளைத் தூக்கும்போது, நாம் கொடுக்கும் விசையானது, அதிகப் பரப்பில் பரவுகிறது. இதனால், தூக்குவது எளிதாக உள்ளது. இரண்டாவது செங்கல் பக்கவாட்டில் நிற்பதால், குறைவான பரப்பில் விசை பரவி, தூக்குவது கடினமாக உள்ளது. மூன்றாவது செங்கல் செங்குத்தாக நிற்பதால், நாம்
தூக்கும்போது கொடுக்கும் விசை, மிகக் குறைவான பரப்பில் பரவுகிறது. இதனால், தூக்குவது மிகவும் கடினமாக உள்ளது.

விசை, அழுத்தம் என்றதும் இனி இந்தச் செயல்பாடுதான் மாணவர்கள் மனதில் வரும்.

- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.