Published:Updated:

10,105 பணியிடங்களுக்கு தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

10,105 பணியிடங்களுக்கு தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
10,105 பணியிடங்களுக்கு தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
10,105 பணியிடங்களுக்கு தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சென்னை அரசு துறைகளில் காலியாக உள்ள 10,105 பணியிடங்களுக்கு தேர்வு  நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.சி. )அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு  தேர்வாணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு  அட்டவணை பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இதில் 27 அரசு துறைகளில் 35  பதவிகளில் காலியாக உள்ள 10,105 பணியிடங்களுக்கு இந்த ஆண்டு தேர்வு  நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

##~~##
குரூப்-1 தேர்வு பெயர் இனி மாநில குடிமை பணி தேர்வு என்று மாற்றப்பட்டுள்ளது. 10  ஆண்டுக்கு பிறகு தேர்வு முறை பாட திட்டத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.  காலியாக உள்ள 1,500 கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஒ.) பணியிடங்களை தேர்வு  மூலம் நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குரூப்-2ல் 1,500 பணியிடங்களும், குரூப்-4ல் 2,716 பணியிடங்களும் நிரப்பப்பட  உள்ளன. 2,300 டாக்டர் பணியிடங்களும், 1,500 கால்நடை டாக்டர் பணியிடங்களும்  தேர்வு மூலம் நிரப்ப ஏற்பாடு நடந்து வருகிறது.