Published:Updated:

கோவில்பட்டி வட்டார நூலகத்தில் உறுப்பினராக இணைந்த 193 மாணவிகள்!

இ.கார்த்திகேயன்
கோவில்பட்டி வட்டார நூலகத்தில் உறுப்பினராக இணைந்த 193 மாணவிகள்!
கோவில்பட்டி வட்டார நூலகத்தில் உறுப்பினராக இணைந்த 193 மாணவிகள்!

கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழித்திட கோவில்பட்டியில் 2 பள்ளிகளைச் சேர்ந்த 193 மாணவிகள், வட்டார நூலத்தில் உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். 


   

கோவில்பட்டி அரசு வட்டார நூலகத்தின் சார்பில் பள்ளி மாணவிகளை நூலகத்தின் உறுப்பினர்களாக இணைக்கும் விழா, கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஏப்ரல் 20 முதல் மே 31-ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையில் செலவிடவும் புத்தக வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திடவும், நூலக புத்தகங்களை இரவல் எடுத்து படித்திட கோவில்பட்டி அரசு வட்டார நூலகத்தில் கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 143 மாணவிகள் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 50 பேர் என மொத்தம் 193 மாணவிகள் நூலக உறுப்பினராக இணைத்துக்கொண்டனர். 

அவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டைகளை நூலகர் அழகர்சாமி வழங்கினார். "நூலகத்தில் கதை, கவிதை, கட்டுரை, இலக்கியம், ஆன்மீகம், அறிவியல் எனப் பல தலைப்புகளில் புத்தகங்கள் இருக்கும். கோடை விடுமுறை விட்டாச்சு. இந்த விடுமுறை நாட்களில் வெயிலில் விளையாடுதல், டி.வி.,பார்த்தல் மட்டுமே பொழுதுபோக்கு. ஆனால், அரசு நூலகத்தில் உறுப்பினராக இணைந்ததால் தோழிகளுடன் சேர்ந்து நூலகத்திற்குச் சென்று புத்தகங்கள் படிக்கச் செல்வோம். பிடித்த புத்தகங்களை நூலகத்தில் வைத்தும், உறுப்பினர் அட்டை மூலம் வீட்டிற்கு எடுத்து வந்தும் படிக்க முடியும். நல்ல புத்தகம் நல்ல நண்பன் என்பார்கள். இந்தக் கோடை விடுமுறையில் நிறைய புத்தகங்களைப் படித்து நிறைய நண்பர்களை உருவாக்க முடிவெடுத்து இருக்கிறோம்" என்றனர் மாணவிகள்.