
அடுக்குத்தொடர்: ஒரே வார்த்தை இரண்டு முறை அடுத்தடுத்து வந்தாலும், அவை தனித்து நின்றும் பொருள் தரும். உதாரணம்: பாம்பு பாம்பு.
இரட்டைக்கிளவி: ஒரே வார்த்தை இரண்டு முறை அடுத்தடுத்து வந்தாலும், தனித்து நிற்கும்போது பொருள் தராது. உதாரணம்: பளபள.
இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறியும் செயல்பாடு செய்யலாம்.
தேவையான பொருள்கள்:
மின் அட்டைகள், வண்ண பேனாக்கள், காகித தொப்பிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
செய்முறை:
• மின்அட்டைகளில் வண்ண பேனாக்களின் உதவியால், பின்வரும் வார்த்தைகளை எழுதி மேஜையின் மீது

வைக்கவும்.

• பாம்பு பாம்பு, திருடன் திருடன், பளபள, குடுகுடு, கலகல, சளசள, படபட, டமடம, சரசர, வளவள, மடமட
• அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி என்று எழுதப்பட்ட காகித துண்டுகளைத் தனித்தனியாக இரண்டு காகிதத் தொப்பிகளில் ஒட்டவும்.
• இரண்டு மாணவர்களை அழைத்து, ஒவ்வொருவரின் தலையிலும் மேற்கண்ட தொப்பிகளை அணிவித்து, வகுப்பறையின் முன்னால் நிற்கச் செய்யவும்.
• மேஜையின் மீது வைக்கப்பட்ட மின்அட்டைத் தொகுப்பில் இருந்து ஒவ்வோர் அட்டையாக தலா ஒரு மாணவர் எடுத்து படிக்கவும். அதன் பொருள் உணர்ந்து அடுக்குத்தொடர் அல்லது இரட்டைக்கிளவி என்று எழுதப்பட்ட தொப்பி அணிந்தவரிடம் கொடுக்கவும்.
- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.