
தேவையான பொருள்கள்: மின்அட்டைகள், வண்ண பேனாக்கள், காகித தொப்பிகள்-3, படங்கள்.
செய்முறை: உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் மற்றும் உயிர்மெய் எழுத்துகள் ஆகியவற்றை தனித்தனி மின்அட்டைகளில் எழுதி, மேஜையின் மீது தனித்தனி தொகுப்பாக வைக்கவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
• ஈரெழுத்து மற்றும் மூன்றெழுத்து வார்த்தைகளை தனித்தனி மின்அட்டைகளில் எழுதி, மேஜையின் மீது வைக்கவும். படங்களாகவும் வைக்கலாம்.
• குறில் மற்றும் நெடில் என்று எழுதப்பட்ட தொப்பிகளை அணிந்துகொண்டு, இரண்டு மாணவர்கள் முன்னால்

நிற்கவும்.
• மேஜையின் மீது உள்ள வார்த்தை அல்லது படத்தை எடுத்து, மூன்றாவது தொப்பியில் வைத்துக்கொண்டு, ஒரு மாணவர் வகுப்பில் முன்னால் நிற்கவும். உதாரணமாக ‘கீரி’...
• கீரி என்ற வார்த்தையின் முதலெழுத்து உயிர்மெய் நெடில் என்பதால், கீ என்ற எழுத்தை ஒரு மாணவர் எடுத்துக்கொண்டு, நெடில் என்ற தொப்பி அணிந்தவரின் அருகில் நிற்கவும்.
• ‘ரி’ என்ற எழுத்து உயிர்மெய் குறில் என்பதால், அந்த எழுத்தை மற்றொரு மாணவர் எடுத்துக்கொண்டு, குறில் தொப்பி அணிந்தவரின் அருகில் நிற்கவும்.
• இவ்வாறாக வார்த்தைகளை மாற்றி மாற்றி எடுத்து, குறில் மற்றும் நெடிலை எளிதாக கற்கலாம்.
- ப.குணசேகரன் ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தரும்புரி.