‘The Brave Rani of Jhansi’ பாடத்துக்கு உரியது.

மாணவர்களை ஆறு குழுக்களாகப் பிரிக்கவும். ஒவ்வொரு குழுவுக்கும் ஆங்கிலப் பாடத்தில் வரும் 10 வாக்கியங்கள் கொடுக்கப்பட வேண்டும் (ஒரு பத்தி எனக் கணக்கிட்டு, ஒவ்வொரு பத்தியிலும் 10 வாக்கியங்கள்).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த வாக்கியங்களை தனித்தனி தாள்களில் இடைவெளிவிட்டு எழுதி, கத்தரித்துக்கொள்ளவும். பிறகு, ஆறு குழுக்களுக்கும் அவரவருக்கான 10 வாக்கியங்களை கலைத்துக் கொடுக்கவும். ஆறு குழுக்களுக்கும் அவரவருக்கு வந்த துண்டு சீட்டுகளை சரியாக அடுக்கி, முழுமையான பத்தியை உருவாக்க வேண்டும். எந்தக் குழு விரைவாக முடிக்கிறதோ, அவர்களுக்கு 10 மதிப்பெண். அடுத்து வரும் குழுக்களுக்கு 9, 8 என வழங்கலாம்.
இப்படி 6 பத்திகளையும் விளையாட்டாக முடிக்கும்போது, முழு பாடமும் மாணவர்கள் மனதில் பதியும். மாணவர்களது Reading Skill வளம்பெறும். இந்தச் செயல்பாட்டை எங்கள் பள்ளியில் செய்தது நன்கு பலன் அளித்தது. உங்கள் பள்ளியிலும் செய்து பார்க்கலாமே!
- து.விஜயலட்சுமி, அ.ஆ.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.