Published:Updated:

இலைக்கு பச்சை நிறம் வந்தது எப்படி?

இலைக்கு பச்சை நிறம் வந்தது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
இலைக்கு பச்சை நிறம் வந்தது எப்படி?

இலைக்கு பச்சை நிறம் வந்தது எப்படி?

இலைக்கு பச்சை நிறம் வந்தது எப்படி?

இலைக்கு பச்சை நிறம் வந்தது எப்படி?

Published:Updated:
இலைக்கு பச்சை நிறம் வந்தது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
இலைக்கு பச்சை நிறம் வந்தது எப்படி?

‘செல்லின் அமைப்பு’ பாடத்துக்கு உரியது.

இலைக்கு பச்சை நிறம் வந்தது எப்படி?

லைகள் பச்சையாகவும் மலர்கள் மற்றும் பழங்கள் பல நிறங்களிலும் இருப்பதற்கான காரணம், அவற்றில் உள்ள கணிகங்களும் நிறமிகளும். தாவரங்களில் காணப்படும் நிறமிகளைப் பொறுத்துத்தான் மலர்கள் மற்றும் பழங்களின் நிறங்களும் அமையும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இலைக்கு பச்சை நிறம் வந்தது எப்படி?

‘குளோரோபிளாஸ்ட்’ எனப்படும் பசுங்கணிகத்தில் உள்ள குளோரோபில் எனப்படும் பச்சையமே, இலைகளின் பச்சை நிறத்துக்கு காரணம். குரோமோபிளாஸ்ட் எனப்படும் வண்ணக் கணிகங்களில் உள்ள கரோட்டின் மலர்கள் மற்றும் பழங்களின் ஆரஞ்சு நிறத்துக்கு காரணம். சாந்தோபில் என்பது மஞ்சள் நிறத்துக்கு காரணம். லியூக்கோபிளாஸ்ட் எனப்படும் நிறமற்ற கணிகம், வேர் மற்றும் தரைகீழ் தண்டின் நிறத்துக்கு காரணம். இந்தக் கருத்தை மாணவர்கள் சுலபமாக நினைவில் நிறுத்த ஒரு செயல்பாடு செய்வோம்.

தேவையான பொருள்கள்: காகிதத் தொப்பிகள், மின் அட்டைகள், வண்ண பேனாக்கள், பல வண்ண மலர்கள் மற்றும் பழங்கள்.

செய்முறை: கணிகம், நிறமி மற்றும் தாவரப் பகுதி என எழுதப்பட்ட தொப்பிகளை அணிந்தவாறு மூன்று மாணவர்கள் நிற்கவும்.

* இலைகள், பல வண்ண மலர்கள் மற்றும் பழங்களை மேஜையின் மீது வைக்கவும். குளோரோபில்,

இலைக்கு பச்சை நிறம் வந்தது எப்படி?

கரோட்டின், சாந்தோபில், பசுங்கணிகம், வண்ணக் கணிகம், லியூக்கோபிளாஸ்ட் என்ற பெயர்களை, தனித்தனி மின் அட்டைகளில் எழுதி, மேஜையின் மீது வைக்கவும்.

* தாவரப் பகுதி என்ற தொப்பியை அணிந்த மாணவரின் கையில், மஞ்சள் நிற மலரைக் கொடுக்கவும். ஒரு மாணவர் எழுந்து வந்து, வண்ணக் கணிகம் என்று எழுதப்பட்ட மின் அட்டையை, கணிகம் என்ற தொப்பியை அணிந்தவரின் கையில் கொடுக்கவும்.

* மற்றொரு மாணவர், சாந்தோபில் என்ற மின் அட்டையை, நிறமி என்ற தொப்பியை அணிந்தவரின் கையில் கொடுக்கவும். இவ்வாறு பலவிதமான மலர்கள், பழங்கள் மற்றும் இலைகளை மாற்றி மாற்றி வைத்து செயல்முறையை செய்யலாம்.

- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism