



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆடுபுலி ஆட்டம், பரமபதம், பல்லாங்குழி என நமது பாரம்பர்ய விளையாட்டு மூலம் மாணவர்களை ஆங்கிலம் கற்க செய்தால் எளிதில் மனதில் பதியும் என இந்தச் செயல்பாடு செய்தேன். இந்த விளையாட்டுகளை பேசிக்கொண்டே விளையாட வேண்டும். அவர்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர் அல்லது பிடித்த விளையாட்டுப் பற்றியும் ஐந்து நிமிடம் பேச வேண்டும். ஒரே ஒரு நிபந்தனை, ஆங்கிலத்தில் பேச வேண்டும். முதலில், பல மாணவர்கள் தயங்கினர்.

துணிச்சலோடு முன்வந்த மாணவர்களைப் பேசச் சொல்லி, தயங்கும் இடங்களில் திருத்தினேன். இதைப் பார்த்ததும் மற்ற மாணவர்களும் முன்வந்தனர். இதுபோன்ற செயல்களால், ஆங்கிலத்தில் பேசும் திறன் அதிகரிப்பதோடு, மாணவர்களின் ஆர்வத்தையும் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும். அவரவர் பங்களிப்புக்கு ஏற்ற மதிப்பீடு வழங்கலாம்.
- தனலட்சுமி கண்ணந்தா, அ.உ.நி.பள்ளி, விளங்குளம், தஞ்சாவூர்.