Published:Updated:

குரூப்-1 தேர்வு: 25 பணியிடங்களுக்கு ஒரு லட்சம் பேர் எழுதினர்!

குரூப்-1 தேர்வு: 25  பணியிடங்களுக்கு ஒரு லட்சம் பேர் எழுதினர்!
குரூப்-1 தேர்வு: 25 பணியிடங்களுக்கு ஒரு லட்சம் பேர் எழுதினர்!
குரூப்-1 தேர்வு: 25  பணியிடங்களுக்கு ஒரு லட்சம் பேர் எழுதினர்!

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.சி) மூலம் நடத்தப்படும் குரூப் 1-க்கான முதற்கட்டத் தேர்வு  தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.

கடந்த ஆண்டு வரை முதற்கட்டத் தேர்வில் 200 கேள்விகளும் பொது அறிவு  தொடர்பானதாக இருந்தன. இந்த ஆண்டு முதல் பொது அறிவு சார்ந்த வினாக்கள் 150  மதிப்பெண்களுக்கும், திறனறிவுத் தொடர்பான கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கும்  கேட்கப்படும்.

##~~##
கடந்த ஆண்டு வரை முதல் கட்டத் தேர்வில் ஒரு இடத்திற்கு 20 பேர் என்ற  அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு முதல் ஒரு இடத்திற்கு 50 பேர்  என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முதன்மைத் தேர்வு கொள்குறி வகை வினாக்கள் வகையில் 2 தாள்களாக நடைபெற்றது.  இந்த ஆண்டு முதல், முதன்மைத் தேர்வு விரிவான விடை வகையில் 3 தாள்களாக  அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு 25 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 1 முதல்கட்டத்  தேர்வு,தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.1, 28,000, பேர் இந்த தேர்வுக்கு  விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் ஒரு லட்சம் பேர் இத்தேர்வை எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.