பொது அறிவு
FA பக்கங்கள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

பெண்மையைப் போற்றுவோம்!

பெண்மையைப் போற்றுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்மையைப் போற்றுவோம்!

கும்மியடி பெண்ணே கும்மியடி பாடத்துக்கு உரியது.

பெண்மையைப் போற்றுவோம்!

மாணவர்களிடம், ‘உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் பற்றி உங்களுக்கு தெரிந்ததைக் கூறுங்கள்’ என்றேன். தாய், சகோதரி, பாட்டி ஆகிய உறவுகளைக் கூறினார்கள். ‘இத்தகைய சிறப்புமிக்க பெண்களின் பெருமையை பற்றி சில செயல்பாடுகள் செய்யலாமா?’ என்றதும் உற்சாகத்தோடு தயாரானார்கள்.

பெண்மையைப் போற்றுவோம்!

பெண்களை மையப்படுத்தி கும்மி பாடல் ஒன்றை மெட்டு அமைத்து உருவாக்கினோம். மாணவிகள், அதற்கேற்ப கும்மி அடித்து அசத்தினார்கள். பிறகு, பெண்களின் நிலை அன்றும், இன்றும் எப்படி இருந்தது, இருக்கிறது என்பதை விளக்கும் வில்லுப்பாட்டு அரங்கேற்றினோம். இறுதியாக, இந்தியாவின் சிறந்த பெண்மணிகள் சிலரின் படங்களை மேஜை மீது வைத்தேன். ஒவ்வொருவராக வந்து மேஜையில் உள்ள படங்களில் காணப்பட்ட யாராவது ஒருவரைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த கருத்துகளைக் கூறச் சொல்லி கலந்துரையாடினோம்.

பெண்மையைப் போற்றுவோம்!

கூறும் தகவல்கள், ஆர்வம் மற்றும் கூச்சம் தவிர்த்துப் பேசுதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு அளித்தோம். 

பெண்மையைப் போற்றுவோம்!

- ஜி.கிறிஸ்டோபர், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.