பொது அறிவு
FA பக்கங்கள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

கிராமத்தில் இருந்து நகரத்துக்கு!

கிராமத்தில் இருந்து நகரத்துக்கு!
பிரீமியம் ஸ்டோரி
News
கிராமத்தில் இருந்து நகரத்துக்கு!

ஊரகமும் நகர்ப்பகுதிகளும் பாடத்துக்கு உரியது.

கிராமத்தில் இருந்து நகரத்துக்கு!

மாணவர்களிடம், ‘‘யாரெல்லாம் கிராமத்தில் இருந்து பள்ளிக்கு வருகிறீர்கள்?’’ என்று கேட்டேன். சில மாணவர்கள் மட்டுமே கைகளை உயர்த்தினர். ``சரி, கிராமத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வோமா?’’ என்று கேட்டதும், ஆர்வத்துடன் தலையாட்டினர்.

கிராமத்தில் இருந்து நகரத்துக்கு!

‘‘இந்தியா, கிராமங்கள் நிறைந்த நாடு. இங்கே சுமார் 70% மக்கள் கிராமங்களில் வசிக்கின்றனர். கிராம மக்களின் முதன்மைத் தொழில் விவசாயம். ஆனால், பல்வேறு காரணங்களால் விவசாயம் நலிந்து வருகிறது. இந்தக் காலத்தில் கிராமங்களை விட்டுப் பலர் நகரங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று வாழ்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், கல்வி, மருத்துவம், போக்குவரத்து வசதி, வேலைவாய்ப்புகள், சமூகப் பாதுகாப்பு ஆகியவை தேவைப்படுகின்றன. நகர்ப் பகுதிகளில் வேலைவாய்ப்புகள் மற்றும் வசதிகள் பரவலாகக் கிடைக்கின்றன. இதனாலேயே கிராமங்களில் இருந்து பலரும் நகரங்களுக்கு வேலைத் தேடிச் செல்கின்றனர்’’ என்றேன்.

கிராமத்தில் இருந்து நகரத்துக்கு!

அடுத்த நாள் பள்ளிக்கு வரும்போது, கிராமத்தில் இருந்து நகரங்களுக்கு வேலைக்குச் சென்றிருப்பவர்களின் பட்டியலைத் தயார்செய்து வரச்சொல்லி, மதிப்பீடு அளித்தேன்.

- ந.ஸ்ரீதர், சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.