Published:Updated:

இது நம்ம கிராமம்!

இது நம்ம கிராமம்!
பிரீமியம் ஸ்டோரி
இது நம்ம கிராமம்!

வெள்ளாட்டுக் குட்டி விளையாட கெட்டிபாலு சத்யா - படங்கள் : சி.சுரேஷ் பாபு - மாடல் : தன்வி

இது நம்ம கிராமம்!

வெள்ளாட்டுக் குட்டி விளையாட கெட்டிபாலு சத்யா - படங்கள் : சி.சுரேஷ் பாபு - மாடல் : தன்வி

Published:Updated:
இது நம்ம கிராமம்!
பிரீமியம் ஸ்டோரி
இது நம்ம கிராமம்!

காலங்கள் எவ்வளவு மாறினாலும் நம் கிராமத்தின் சில விஷயங்கள் எப்பவும் மாறாது. அப்படி நீங்க தெரிஞ்சுக்க ‘நச்’னு நாலு விஷயங்கள்...

இது நம்ம கிராமம்!

படித்துறை

படித்துறையின் கடைசிப் படியில உட்கார்ந்து, கால்களை குளத்துக்குள்ளே தொங்கப்போட்டா, மீனுங்க வருடுவது சும்மா சொகமா இருக்குமுங்க. குளங்களின் பெருமை தெரியுங்களா உங்களுக்கு?

மழைநீர், ஆற்றில் இருந்து வீணாகப் போகும் தண்ணீரை சேமிக்கவே குளங்களை வெட்டினாங்க. குடிநீருக்கும்  விவசாயத்துக்கும் பயன்படுத்தினாங்க. குளங்களைத் தூர்வாரிப் பராமரிச்சாலே, தண்ணீர் பஞ்சம் தீருமுங்க. கோயில் குளங்களை, `தெப்பக்குளங்கள்’னு சொல்லுவாங்க. திருவிழா நடத்தி, தண்ணீருக்கும் இறைவனுக்கும் நன்றியைச் சொல்லுவாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது நம்ம கிராமம்!

செப்புப் பாத்திரம்

பல நூறு வருஷங்களா நம்ம பாட்டிங்க பயன்படுத்தின பித்தளை மற்றும் செம்பு (செப்பு) பற்றி தெரியுங்களா உங்களுக்கு?

இந்தப் பாத்திரங்களில் பிடிச்சு வைக்கும் தண்ணீர், உடம்புக்கு ஆரோக்கியம் கொடுக்குமுங்க. காரணம், இந்த உலோகங்கள், நீரில் இருக்கும் நோய்க்கிருமிகள் பெருகுவதைத் தடுக்குமுங்க. நீர் மூலம் பரவும் பல தொற்றுநோய்களைக் குறைக்குமுங்க. அதனாலதான் கோயில்களில் கொடுக்கும் தீர்த்தம் என்கிற புனித நீரை செப்புப் பாத்திரத்தில் கொடுக்குறாங்க. ஆயுர்வேத மருத்துவத்திலும் இதன் அருமை இருக்குங்க. பண்டைய எகிப்து நாட்டிலும் செப்புப் பாத்திரம் பயன்பாட்டில் இருந்து இருக்குங்க.

இது நம்ம கிராமம்!

வெள்ளாட்டுக் குட்டி

காந்திக்குப் புடிச்சது வெள்ளாட்டுப் பால். இந்தக் கண்ணாத்தாளுக்கு… (அட, நான்தேன்) புடிச்சது வெள்ளாட்டுக் குட்டி. வருசநாட்டு மலை அடிவாரம்… எங்க பாட்டன், முப்பாட்டன் பாதம் படாத எடம் இல்லை. அம்புட்டும் அவுக ஆடு மேய்ச்ச நெலம். வெள்ளாட்டை சாதாரணமா நெனச்சுப்புடாதீக. வறண்ட இடங்களில் கிடைக்கும் கொஞ்சூண்டு புல், பூண்டைத் தின்று வளரும் பாருங்க. இந்தியாவில் மொத்தம் 19 வெள்ளாட்டு இனங்கள் இருக்குங்க. தமிழ்நாட்டில், `கன்னி ஆடு’, `கொடி ஆடு’, `சேலம் கருப்பு’ ஆகிய இனங்கள் இருக்குங்க. வெள்ளாட்டுப் பாலில் மருத்துவக் குணம் நிறைஞ்சு இருக்குங்க. இதில், கொழுப்பு ரொம்ப குறைவுங்க. கிராமத்துக்குக் குழந்தைகளுக்கு இதுவும் ஒரு விளையாட்டுத் தோழனுங்க. 

சுங்கிடிச் சீலை


தெற்கு ஆசியாவில் பெண்கள் அதிகம் உடுத்தும் ஆடை, ‘புடவை’ என்ற சேலை. இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் இது பிரபலம். இந்தியாவின் வட மாநிலங்களில் `சாடி’, கன்னடத்தில் `சீரே’, தெலுங்கில் `சீரா’ என்று சொல்லுவாங்க. நான் கட்டி இருக்கிறது, மதுர சுங்கிடிச் சீலை. `சுங்கு’ என்ற தெலுங்குச் சொல்லுக்கு, `புடவையின் மடிப்பு’ என்று அர்த்தமுங்க. இந்தச் சேலைக்குப் பின்னாடி ஒரு ராஜா கதை இருக்குங்க.

இது நம்ம கிராமம்!

கிராமத்துக்கு வாங்க

மதுரையை ஆண்ட திருமலை நாயக்கருக்கு ஜரிகை ஆடைகள் மேலே ரொம்ப இஷ்டமுங்க. ஆந்திராவின் மசூலிப்பட்டணத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்னாடி, மஸ்லின் துணி நெய்வதில் பிரபலமான சௌராஷ்டிரர்களை மதுரைக்கு வரவெச்சாருங்க. பருத்தி, பட்டு இழைகளால் புடைவைகளைத் தயாரிக்கச் சொன்னாருங்க. அதுதான் இப்பவும் சிறப்பா இருக்கும், சுங்கிடிச் சீலை என்கிற சேலைங்க.

வருஷத்துக்கு ஒருமுறையாவது கிராமங்களுக்குப் போங்க; நம்ம பாரம்பரியத்தைத் தெரிஞ்சுக்கிட்டு வாங்க!