Published:Updated:

அழிய விடல் ஆகாது பாப்பா! - சிங்கவால் குரங்கு

அழிய விடல் ஆகாது பாப்பா! - சிங்கவால் குரங்கு
பிரீமியம் ஸ்டோரி
அழிய விடல் ஆகாது பாப்பா! - சிங்கவால் குரங்கு

ஆயிஷா இரா.நடராசன்

அழிய விடல் ஆகாது பாப்பா! - சிங்கவால் குரங்கு

ஆயிஷா இரா.நடராசன்

Published:Updated:
அழிய விடல் ஆகாது பாப்பா! - சிங்கவால் குரங்கு
பிரீமியம் ஸ்டோரி
அழிய விடல் ஆகாது பாப்பா! - சிங்கவால் குரங்கு
அழிய விடல் ஆகாது பாப்பா! - சிங்கவால் குரங்கு

அன்புள்ள நண்பா...

நான்தான் சிங்கவால் குரங்கு எழுதுகிறேன். யார் யாரிடமோ முறையிட்டு நியாயம் கிடைக்காமல், உன்னிடம் வந்திருக்கிறேன்.

நாங்கள் உயிரியல் முறைபடி ‘மெக்காக்கா சைலீனஸ்’ (Macaca Silenus) என்று அழைக்கப்படுகிறோம். தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையும் அதைச் சார்ந்த காடுகளுமே எங்கள் பாரம்பர்ய வாழிடம்.

ஆஞ்சநேயர், அனுமன் என்றெல்லாம் குரங்குகளை வணங்கிப் போற்றுகிறார்கள். ஆனால், எங்கள் இனத்தையே ஓட ஓட விரட்டி அழித்துவிட்டார்கள்.

எங்கள் வாலும் பிடரி முடியும் சிங்கத்தை போன்று இருக்கும். அதனால்தான் 'சிங்கவால்' என்று பெயர். முகம், முடி இன்றி கருமையாக பளபளக்கும். எங்கள் வெண்ணிற பிடரி முடிக்கு அயல்நாட்டில் அதிக விலை பேசப்படுகிறது. பாடம் செய்யப்பட்ட உடலுக்காகவும் நாங்கள் வேட்டையாடப்படுகிறோம். ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இது நடக்கிறது.

எங்கள் வாழ்க்கை வித்தியாசமானது. அடர்ந்த உயர்ந்த உச்சிமரக் கிளைகளே எங்கள் வாழிடம். ‘மரங்களின் குரல்கள்' என்று எங்களை மலைவாழ் மக்கள் அழைப்பார்கள். எங்களில் பலர், மரஉச்சியில் இருந்து இறங்குவதே கிடையாது. அங்கேயே பிறந்து வாழ்ந்து, மண்ணைப் பார்க்காமலேயே   முழுமையாக வாழ்ந்துவிட எங்களால் முடியும்.

ஆனால், ‘மரங்களின் குரல்கள்' இப்போது கேட்பது இல்லை நண்பா. கூட்டம் கூட்டமாக ஆயிரக்கணக்காக வாழ்ந்த நாங்கள், இப்போது, 200 பேருக்கும் குறைவாக  மிஞ்சி இருக்கிறோம்.

மலைக்காடுகளின் கம்பீரம் நாங்கள். பழங்கள் மற்றும் தழைகளை உண்டு, யாருக்கும் எந்தத் தொல்லையும் தராமல் நாங்கள் வாழ்கிறோம். தாவரங்களின் இனவிருத்திக்கு நாங்கள் முக்கிய பங்காற்றுவதால் எங்கள் அழிவு, காடுகளின் அழிவையே குறிக்கிறது.

அழிய விடல் ஆகாது பாப்பா! - சிங்கவால் குரங்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேயிலை, காபி தோட்டங்கள், தேக்கு மரங்கள் மூலம் பணம் ஈட்டவும், ஒரே வகை யூகலிப்ட்ஸ் மரங்களை நட்டு செல்வந்தராக மாறவும் சில மனிதர்களுக்குப் பேராசை. அதற்காக பிற மரங்களையும் எங்கள் வாழிடங்களையும் அழிக்கிறார்கள்.

கேரளத்தின் அமைதிப் பள்ளத்தாக்கில் 14 குடும்பங்களும், தமிழகத்தின் தேனி, திருநெல்வேலி மற்றும் பாபநாசம் பகுதிகளில், 10 முதல் 12 குடும்பங்களுமாக நாங்கள் சுருங்கிவிட்டோம் நண்பா.

இனி, நீங்கள்தான் எங்களை அழிவில் இருந்து மீட்க வேண்டும். காடுகளின் அழிவைத் தடுக்க, நண்பர்களோடு பேசுங்கள்.

மருந்து என்ற பெயரில் எங்களின் இறைச்சி, தோல் ஆகியவை சட்ட விரோதமாக விற்கப்படுவதை  தடுக்க, உங்களால் முடிந்த விழிப்பு உணர்வை பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து செய்யுங்கள். எங்களுக்காக உரத்த குரல் எழுப்புங்கள்.
உன்னை நம்பி இந்தப் பொறுப்புகளை ஒப்படைக்கிறேன். செய்வாயா நண்பா?

இப்படிக்கு
சிங்கவால் குரங்கு,
மேற்குத்தொடர்ச்சி மலை