Published:Updated:

எஃப்.ஏ பக்கங்கள்

எஃப்.ஏ பக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
எஃப்.ஏ பக்கங்கள்

எஃப்.ஏ பக்கங்கள்

எஃப்.ஏ பக்கங்கள்

எஃப்.ஏ பக்கங்கள்

Published:Updated:
எஃப்.ஏ பக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
எஃப்.ஏ பக்கங்கள்

செஞ்சாங்க... ஜெயிச்சாங்க!

எஃப்.ஏ புராஜெக்ட் போட்டி முடிவு!

எஃப்.ஏ பக்கங்கள்

ன்பு மாணவர்களே...

வணக்கம். தமிழ்நாட்டுப் பாடத் திட்டத்தின் கீழ் தொடங்கிய CCE வளரறி மதிப்பீட்டுக் கல்வி முறை, ஒவ்வோர் ஆண்டும் உங்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்த ஆண்டு, இரண்டாம் பருவத்துக்கான புராஜெக்ட் போட்டியை அறிவித்ததும், உங்களிடம் இருந்து வந்த செயல்திட்டங்களின் ஒவ்வொரு படைப்பிலும், கற்பனைத் திறன் அற்புதமாக வெளிப்பட்டிருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் அடுத்தடுத்த பக்கங்களில் அணிவகுக்கின்றன. மாணவர்களின் திறமைக்கு சான்றிதழும் பள்ளிகளுக்குப் பரிசாக புத்தகங்களும் அனுப்பப்படுகின்றன. அடுத்த இதழிலும் உங்கள் படைப்புகள் இடம்பெறும்.

தொடரட்டும் உங்கள் கற்பனைத் திறன்... உயரட்டும் கல்வித் தரம்.

மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.

எஃப்.ஏ பக்கங்கள்

உயிர் பெறும் உருவங்கள்!

பிளாஸ்டிக் பாட்டில்களில் மீன், ஆமை, ஆப்பிள், பூ ஜாடி, பேனா ஸ்டாண்ட், போட்டோ ஃபிரேம் போன்றவற்றை உருவாக்கினோம். ஆசிரியரிடம் பாராட்டுப் பெற்றோம்.

- எம்.பிரியதர்சினி, எஸ்.ஜனனிஸ்ரீ,எஸ்.பேச்சிகதிர்வேல், கே.அஜய், கே.ரகு, எஸ்.சத்தியபிரபா, 5-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

காகித முள்ளம்பன்றி!

பழைய காகிதங்களைப் பயன்படுத்தி முள்ளம்பன்றியை உருவாக்கினோம். காகிதத்திலேயே கண்கள், மூக்கு ஆகியவற்றை வைத்து  அழகுபடுத்தினோம். ஆசிரியரிடம் காண்பித்து பாராட்டு பெற்றோம்.

 - எம்.கார்த்திக்ராஜா, கே.கவியரசி, எஸ்.விஸ்வா, 5-ம் வகுப்பு

எஃப்.ஏ பக்கங்கள்

பேப்பர் பிளேட் புலியானது!

எஃப்.ஏ பக்கங்கள்


பேப்பர் தட்டு மற்றும் பேப்பர் கப் மூலம்... புலி, புறா, மரம், பூனை, ராக்கெட், வண்ணத்துப்பூச்சி, வீடு, பூக்கள், சூரியன், மீன், சிலந்தி, முயல் என பல உருவங்களை உருவாக்கி, வண்ணம் தீட்டினோம். ஆசிரியரிடம் மதிப்பீடு பெற்றோம்.

 - எம்.சாய்ஸ்ரீ, எஸ்.ஜனனிஸ்ரீ, எஸ்.பேச்சிகதிர்வேல், எஸ்.சரத்ராஜ், பி.சரவணவேல், 5-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

பந்தா... பூச்சியா?

பிளாஸ்டிக் பந்துகளை நூல் மூலம் ஒன்றோடு ஒன்று இணைத்து, புழுக்களை உருவாக்கினோம். தவளை, வண்டு, தேனீ, வண்ணத்துப்பூச்சி போன்றும் உருவாக்கினோம். ஒரு தெர்மாகோலில் பச்சை வண்ணம் தீட்டி, பிளாஸ்டிக் மரங்களைப் பொருத்தினோம். அவற்றுக்கு நடுவே பூச்சிகள் உலகம் கண்களைக் கவர்ந்தது.

- எம்.சாய்ஸ்ரீ, பி.சரவணவேல், ஏ.ஜோயல், 5-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

மணல் கடிகாரம்!

எஃப்.ஏ பக்கங்கள்


இரண்டு கண்ணாடி பாட்டில்களை எடுத்துக்கொண்டோம். அவற்றின் மூடிகளில் துளையிட்டோம். ஒரு பாட்டிலில் மணலை நிரப்பினோம். மூடிகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்குமாறு தலைகீழாக வைத்து, இரண்டு பாட்டில்களையும் இணைத்தோம். எங்கள் மணல் கடிகாரம் ரெடி. இதன் செயல்திறனை ஆசிரியரிடம் விளக்கி, மதிப்பீடு பெற்றோம்.

 - எஸ்.பூபதி, எஸ்.மோகனப்பிரியா, 5-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

ஸ்ப்ரே ஓவியம்!

காகிதத்தில் ஓர் உருவத்தின் படத்தை வைத்து, பல் துலக்கும் பிரஷ் மூலம் வண்ண மையைத் தொட்டு, சுற்றிலும் ஸ்ப்ரே செய்தோம். அந்த உருவம் வெள்ளையாக, மற்ற இடங்கள் வண்ணமானது. உருவத்தின் அவுட் லைன் வரைந்து, அதற்குள்ளும் ஸ்ப்ரே செய்து உருவங்களை உருவாக்கினோம்.

- எஸ்.சரத்ராஜ், எஸ்.முத்துலட்சுமி, வி.விமல், கே.கிரண், 5-ம் வகுப்பு.

சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.

எஃப்.ஏ பக்கங்கள்

பறக்கும் யானை!

கற்பனைத் திறனை வளர்க்கும் விதத்தில் ஒரு செயல்பாடு செய்யச் சொன்னார் ஆசிரியர். பலூன்களைப் பிடித்துக்கொண்டு யானை பறப்பதுபோல வரைந்து, வெட்டிக்கொண்டேன். அதற்கு ஏற்ற வண்ணம் தீட்டி, மதிப்பீடு பெற்றேன்.

 - ம.தனுதர்ஷினி, 5-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

மதிப்பீடு தந்த பூந்தொட்டி!

நான்கின் மடங்குகளை எளிய முறையில் அறிய, வண்ணக் காகிதங்களில்  நான்கு பூந்தொட்டிகளைச் செய்தோம். அதில், நான்கின் மடங்குகளை இதழ்களில் எழுதி, மதிப்பீடு பெற்றோம்.

 - ம.வாசுகி, பா.திவ்யதர்ஷினி, 3-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

காலம் பொன் போன்றது!

நேர மேலாண்மையை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய சார்ட் ஒன்றை, தெர்மாகோலில் ஒட்டினேன். நிஜமான கடிகாரத்தையும் பொருத்தினேன். நேரத்தை எவ்வாறு திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும் என வகுப்பில் எடுத்துச் சொல்லி, முழு மதிப்பீடு பெற்றேன்.

 - ஆ.மகாலெட்சுமி, 4-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

கோள்களான பந்துகள்!

எங்கள் ஆசிரியர், ‘சுழன்றும் சுற்றியும் வரும் பூமி’ பாடத்தை நடத்தினார். ‘பூமி, சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுக்கும் கால இடைவெளியே  ஓர் ஆண்டு’ என்றார். அதற்கான செயல்பாடாக, ஒரு சார்டில் சூரியன் மற்றும் அதனைச் சுற்றும் கோள்களை வரைந்தேன். சூரியன், கோள்கள் இருக்கும் இடத்தில் பந்துகளை ஒட்டி, மதிப்பீடு பெற்றேன்.

 - சி.காயத்ரி, 6-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

ஆசிரியருக்கு ஒரு கடிதம்!

‘நமக்காக’ என்னும் பாடத்துக்காக, தெர்மாகோலில் தபால் பெட்டியைச் செய்தேன். அதற்கு வண்ணம் தீட்டினேன். என் ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதி, அந்தப் பெட்டியில் போட்டு காண்பித்தேன். ஆசிரியர் பாராட்டி, எனக்கு முழு மதிப்பீடு அளித்தார்.

 - ம.புகழேந்தி, 3-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

கொட்டாங்குச்சி தராசு!

‘அளவுகள்’ பாடப் பகுதிக்காக, கொட்டாங்குச்சி, நூல், பேப்பர்களைப் பயன்படுத்தி தராசு தயாரித்தேன். அதில், சாக்பீஸ்களை வைத்து நிறுத்துக்காட்டினேன். மதிப்பீடு பெற்றேன்.

 - கு.அனுஷியா, 2-ம் வகுப்பு.

டாக்டர் திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.

எஃப்.ஏ பக்கங்கள்

விண்வெளி வீரர்கள் ஆல்பம்!

‘விண்ணைத்தாண்டி’ பாடத்துக்கு, விண்வெளி வீரர்கள் குறித்த படத்தொகுப்பையும் அவர்கள் குறித்த தகவல்களையும் சேகரித்து ஒட்டினேன். ஆசிரியரிடம் காண்பித்து, ஒவ்வொரு வீரர் பற்றியும் எடுத்துச் சொன்னேன். பாராட்டும் மதிப்பீடும் பெற்றேன்.

- வீ.யுவராணி, 5-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

மதிப்பீடு அளித்த கருத்துப் படம்!

செய்தித்தாள் படித்து, அந்தச் செய்தி குறித்து கருத்து வரைபடம் வரைய சொன்னார் ஆசிரியர். ரூசோ குறித்த செய்தியை வெட்டி எடுத்து, சார்ட்டில் ஒட்டினோம். பிறகு, ரூசோ பற்றி நூலகத்தில் நாங்கள் சேகரித்த குறிப்புகள் மூலம் கருத்து வரைபடம் உருவாக்கினோம். ஆசிரியரிடம் காண்பித்து  மதிப்பீடு பெற்றோம்.

- பொ.அருணாதேவி, க.நித்யா, ப.பிரபாவதி, வீ.யுவராணி, 5-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

ராக்கெட்டில் வந்த மதிப்பீடு!

ராக்கெட் செய்து வரும்படி எங்கள் ஆசிரியர் கூறினார். நண்பர்களாக இணைந்து செய்யத் திட்டமிட்டோம். காகிதம், கத்தரிக்கோல், செலோபன் டேப், பசை உதவியுடன் பல்வேறு வடிவங்களில் ராக்கெட் செய்தோம். அதன் செயல்பாடு குறித்து விளக்கி, பாராட்டும் மதிப்பீடும் பெற்றோம்.

- யோகேஸ்வரன், வேல்பாண்டி, பிரபாவதி,

எஃப்.ஏ பக்கங்கள்

செயற்கைக்கோள் மாதிரி!

செயற்கைக்கோள் மாதிரியை  சார்ட், பந்து, செலோபன் டேப், பசை, வண்ண காகிதம் ஆகியவற்றைக்கொண்டு செய்தோம். செயற்கைக்கோளின் பயனைக் கூறி, ஆசிரியரிடம் பாராட்டும் மதிப்பீடும் பெற்றோம்.

- வீ.யுவராணி, பூ.ஆதிஸ்வரன், க.யோகேஸ்வரன், 5-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

அட்டை வீடுகள்!

பழைய அட்டைகள் மூலம் பலவித வீடுகளின் மாதிரிகளைச் செய்தோம். பிறகு, இவற்றை நாங்கள் எப்படி உருவாக்கினோம் என்பதை வகுப்பு நண்பர்களுக்கு கற்றுக் கொடுத்தோம். ஆசிரியரின் பாராட்டு பெற்றோம்.

- பிரபாவதி, பூ.ஆதிஸ்வரன், வேல்பாண்டி, 5-ம் வகுப்பு.


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.

எஃப்.ஏ பக்கங்கள்

காய்கறியும் மதிப்பீடு பெற்றுத் தரும்!

‘பொருட்களைப் பிரித்தெடுத்தல்’ பகுதியின் அனைத்து வகைகளையும் நண்பர்களோடு சேர்ந்து, செயல்பாடுகளாக செய்யத் திட்டமிட்டோம். நான், வீட்டில் இருந்து பலவித காய்கறிகளை எடுத்துவந்து, அதை வகைப் பிரித்து விளக்கி, மதிப்பீடு பெற்றேன்.

- செ.ஹரிணி, 6-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

காந்தம்போல மதிப்பீட்டை இழுத்தேன்!

நான் ஒரு கண்ணாடி டம்ளரில் பாதி அளவு நீர் எடுத்துக்கொண்டேன். அதில், சில குண்டூசிகளைப் போட்டு காந்தம் மூலம் அவற்றை பிரித்துக் காட்டினேன். ஆசிரியர் முழு மதிப்பீடு அளித்தார்.

- செ.ஜீவா, 6-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

 ருசியான மதிப்பீடு!

நான் வீட்டில் இருந்து பழங்கள் எடுத்து வந்தேன். அவற்றின் வகைகளைப் பிரித்துக்காட்டி, பயன்களை விளக்கினேன். சுவையான பழங்கள், ருசியான மதிப்பீட்டைத் தந்தது.

- பெ.ஜெயஸ்ரீ, 6-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

வண்ண வண்ணப் பூக்கள்!

எங்கள் பள்ளியின் தோட்டத்தில் உள்ள பலவித பூக்களைப் பறித்து வந்தேன். அவற்றை வகை பிரித்தேன். ‘எதன் அடிப்படையில் பிரித்தாய்?’ என ஆசிரியர் கேட்டதற்கு, ‘வண்ணங்களை வைத்து’ என்றேன். மதிப்பீடு கிடைத்தது.

- கி.கார்த்திகேயன், 6-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

நானே செய்த முறம்!

என் வீட்டில் இருந்து அரிசி எடுத்து வந்தேன். அதில், கலந்துள்ள கற்களைப் பிரித்தெடுக்க அட்டையில் முறம் தயாரித்தேன். அதில் அரிசியைப் புடைத்து, கற்கள் மற்றும் குருணையைப் பிரித்துக் காண்பித்தேன். ஆசிரியர் பாராட்டி, மதிப்பீடு அளித்தார்.

- மு.சாலா, 6-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

டீ வேண்டுமா?

வடிகட்டுதல் மூலம் பொருட்களைப் பிரிக்கலாம். இதற்காக, நீருடன் கலந்த டீத்தூளின் கசடுகளை வடிகட்டி காண்பித்தேன். ‘யாருக்கெல்லாம் டீ வேண்டும்?’ எனக் கேட்டு, பிளாக் டீ கொடுத்தேன். ஆசிரியர் பாராட்டி,  மதிப்பீடு அளித்தார்.

- பிரதீப், 6-ம் வகுப்பு.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சிக்கபடகாண்ட அள்ளி, தருமபுரி.

எஃப்.ஏ பக்கங்கள்

 சாலைவிதி குறியீடுகள்!

சாலைவிதிகளை நமக்கு உணர்த்தும் குறியீடுகளை நாங்களே தயார்செய்ய முடிவெடுத்தோம். அதன்படி, அனைத்து குறியீடுகளையும் பட்டியலிட்டோம். அதை ஒவ்வொருவரும் பிரித்துக்கொண்டோம். அடுத்த நாள் பள்ளிக்கு வரும்போது, அட்டை மற்றும் தெர்மாகோலில் தயார்செய்து எடுத்து வந்தோம். பள்ளி மைதானத்தையே சாலையாக நினைத்து, சாலைக் குறியீடுகள் என்ன சொல்கின்றன என்பதை ஒவ்வொருவரும் விளக்கினோம். மதிப்பீடு பெற்றோம்.

சரவணன், செல்லம்மாள், அன்னபூரணி, வேகன், பழனி, நவீன், மோகன், தர்ஷினி, 4-ம் வகுப்பு

எஃப்.ஏ பக்கங்கள்

விதவிதமான வீடுகள்!

வீடுகள் தொடர்பாக ஒரு செயல்பாட்டை நண்பர்களாக இணைந்து செய்தோம். சார்ட்டில் விதவிதமான வீடுகள் வரைந்துகொண்டோம். அதனை அழகாக வெட்டிக்கொண்டோம். கூரை வீட்டின் மேல் பகுதியில், வைக்கோலை ஒட்டினோம். அதைப் பார்த்த ஆசிரியர் மகிழ்ச்சியோடு மதிப்பீட்டை அள்ளித் தந்தார்.

சிவசக்தி, ஆனந்த வெங்கடேஷ், சாவித்திரி, 5-ம் வகுப்பு 

எஃப்.ஏ பக்கங்கள்

சுழல் அட்டை செயல்பாடு!

இலக்கணச் செயல்பாட்டை சுழல் அட்டையில் தயார்செய்தேன். இடம், பொருள், காலம், வினை, குணம், தொழில் என 6 வகைகளையும் ஓர் அட்டையில் எழுதிக்கொண்டேன். பெரிய அட்டையில் அவற்றுக்குரிய படங்களை ஒட்டினேன். இரண்டு அட்டைகளையும் இணைத்து சுழலவிட்டேன். சரியான பெயர்ச் சொற்களுக்கு உரிய படங்களைப் பொருத்தி, வகைகளை அறியும்படி செய்து ஆசிரியர் மதிப்பீடு பெற்றேன்.

- கே.முருகன், 7-ம் வகுப்பு, அ.மே.நி.பள்ளி, நடுவீரப்பட்டு.

எஃப்.ஏ பக்கங்கள்

நாங்க உருவாக்கிய மெகா கடிகாரம்!

ஆசிரியர் ‘நேரம்’ பற்றி பாடம் நடத்தியதும், வகுப்பு மாணவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டுச் செயல்பாடு ஒன்றைச் செய்தோம். பள்ளி மைதானத்தில் கோலமாவால் கடிகாரம் வரைந்தோம். விறகுகளை முட்களாக்கி, ஆசிரியர் கூறும் நேரத்தை சரியாக காட்டி, மதிப்பீடு பெற்றோம்.

4-ம் வகுப்பு மாணவர்கள்,  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வடக்கு வலையப்பட்டி.

அரசு உயர்நிலைப் பள்ளி, விளங்குளம், தஞ்சாவூர்.

எஃப்.ஏ பக்கங்கள்

சுட்டி விகடன் தந்த மதிப்பீடு!

கல்வி இணைச் செயல்பாடாக, சுட்டி விகடன் தந்த பெங்குவின் க்ரியேஷனை அழகாக செய்தோம். நூலகத்தில் பெங்குவின் பற்றிய செய்திகளைச் சேகரித்து, ஆசிரியரிடம் கூறினோம். மதிப்பீடு பெற்றோம்.

- ஆர்.ஆரோக்கிய சுமித்ரா, என்.தர்ஷினி,    6-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

ஸ்மைலி!

‘Dreams can come true’ பாடத்தின்  செயல்பாடாக, ஸ்மைலி பட்டன்களைச் சேகரித்தோம். ஆசிரியரிடம் காண்பித்து  மதிப்பீடு பெற்றோம்.

- எம்.ஹரிஹரன், எஸ்.சந்தோஷ், 7-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

சிங்கம் - புலி!

‘A Tiger in the Zoo’ பகுதிக்காக,  சரணாலயத்தில் இருக்கும் சில விலங்குகளை வரைந்து, அவற்றின் குணங்களையும் எழுதினோம். ஆசிரியர் நல்ல மதிப்பீட்டை அளித்தார்.

- கே.மணிமொழிச் செல்வன்,    பி.அருள் ஜெபஸ்டீன் ராஜ், 8-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

கிரிக்கெட் பேட்

‘Ranji’s wonderful Bat’ பாடத்துக்காக, நாங்களே கிரிக்கெட் பேட்டை உருவாக்கினோம். எப்படி உருவாக்கினோம் என்பதை ஆங்கிலத்தில் கூறி, மதிப்பீடு பெற்றோம்.

- கே.நீலகண்டமூர்த்தி,  எஸ்.அருள்செல்வன், 7-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

விழி - செவி உரையாடல்!

‘The  Mystery of language’ பாடத்துக்காக, பார்வைத்திறன் இல்லாத மாற்றுத்திறனாளி போல ஒருவர் வேடமிட, மற்றொருவருடன்  உரையாடுவதைப் போல நடித்துக்காட்டி மதிப்பீடு பெற்றோம்.

- எஸ்.காவியா, எம்.பரங்கிசெல்வி, 6-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

Singular - Plural

ஆங்கில இலக்கணத்தில் singular - plural வித்தியாசத்தைச் சுட்டும் செயல்பாடாக, தனித் தனி அட்டவணைகள் தயார்செய்தோம். வகுப்பில் சில நிமிடங்கள் மாட்டி, எல்லோரையும் படிக்கச் சொன்னோம். பிறகு, அட்டையைத் திருப்பி மாட்டிவிட்டோம். மற்ற மாணவர்கள் எங்களிடம் அட்டவணையில் உள்ள வார்த்தைகளைக் கேட்டார்கள். அதற்கு தகுந்த சொல்லை, (singular கேட்டால் plural) கூறி, மதிப்பீடு பெற்றோம்.

- ஏ.கோபால், எஸ்.சதீஷ்ராஜ், 8-ம் வகுப்பு.

ஆல்ஃபா ஜி.கே.மெட்ரிக் பள்ளி, அரவேணு.

எஃப்.ஏ பக்கங்கள்

இணைந்து செய்தோம் இலக்கியச் செயல்பாட்டை!

நாங்கள் இருவரும் வெவ்வேறு வகுப்புகள். எனினும், தமிழ் இலக்கணத்தின் பா வகை மற்றும் வழு  ஆகியவற்றுக்கான சுழல் அட்டைச் செயல்பாட்டை இணைந்து செய்யத் திட்டமிட்டோம்.

முதல் அடுக்கில் பா வகைகள், இரண்டாவது அடுக்கில் ஓரசைச் சீர் என எழுதி, அவற்றை இணைத்தோம்.

வட்ட வடிவில் அட்டையை வெட்டி, அதில் சார்ட்டை ஒட்டி,  வழுநிலை வகைகளை ஆங்காங்கே வண்ணப் பேனாவில் எழுதினோம். பின்னர், மற்றொரு சிறிய வடிவத்தில் அட்டையை வட்டமாக வெட்டினோம். அதில், இதய வடிவில் ஒரு துளையை ஏற்படுத்தினோம். பெரிய வட்ட வடிவத்தின் மேல் இதைப் பொருத்தி, சேர்த்தோம். சின்ன அட்டையை சுழற்றும்போது, துளை வழியாக வழு வகைகள் தெரியும்.

எங்கள் ஆசிரியர்களிடம் காண்பித்து மதிப்பீடு பெற்றோம்.

- கீர்த்தனா, 8-ம் வகுப்பு, பிரியங்கா, 9-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

‘பஞ்சு’ பூ

‘கைவண்ணம்’ பகுதிக்காக, சார்ட்டில் பூக்களை வரைந்து கொண்டோம். பூக்களின் இதழ், இலைப் பகுதிகளில் பஞ்சு வைத்து ஒட்டினோம். அதற்கு ஏற்ற வண்ணம் தீட்டி, மதிப்பீடு பெற்றோம்.

4-ம் வகுப்பு மாணவர்கள்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காளாச்சேரி மேற்கு, நீடாமங்கலம்.

எஃப்.ஏ பக்கங்கள்

 தொப்பியில் Tense!

ஆங்கிலத்தில் Tense வகைகளைத் தொப்பியில் அணிந்து, தன் தொப்பியில் உள்ள Tense-க்கு ஏற்ற வாக்கியங்களைச் சொல்லி, மதிப்பீடு பெற்றோம்.

6-ம் வகுப்பு மாணவர்கள்.

எஃப்.ஏ பக்கங்கள்

 சக உயிர்களைக் காப்போம்!

நம்மைப் போலவே சக உயிர்களை மதித்து, அவற்றைக் காப்பாற்ற வேண்டும். இதை வலியுறுத்தும் விழிப்பு உணர்வு செயல்பாடு செய்தோம். பறவை, விலங்குகள் போல வேடம் அணிந்து, உயிர் காக்கும் வாசகங்களைச் சொல்லி, மதிப்பீடு பெற்றோம்.  

  8-ம் வகுப்பு மாணவர்கள்.

எஃப்.ஏ பக்கங்கள்

மேஜையைத் தள்ளி மதிப்பீட்டைப் பெற்றோம்!

‘ஆற்றல்’ பாடத்துக்காக, ‘அழுத்தத்தின் வேகம் அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும்’ என்பதை விளக்கும் செயல்பாடு இது. வகுப்பு மேஜையை மெதுவாக தள்ளினோம். பிறகு வேகமாக தள்ளினோம். இரண்டும் கடந்த தூரத்தை கணக்கீட்டுச் சொல்லி, மதிப்பீடு பெற்றோம். 

4-ம் வகுப்பு மாணவர்கள்,   ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,  நல்லம்பாக்கம்.

எஃப்.ஏ பக்கங்கள்

பசுமையான மதிப்பீடு தந்த கீரை!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரைகள் பற்றி ஆசிரியர் கூறினார். அடுத்த நாள் வரும்போது ஆளுக்கொரு கீரை எடுத்துவரச் சொன்னார்.  அதன்படி, நாங்களும் எடுத்துவந்தோம். கீரையின் பெயர்களைக் கூறினோம். கீரையின் சத்துகளைக் கூறி, மதிப்பீடு பெற்றோம்.

4-ம் வகுப்பு மாணவர்கள், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, இராமனூத்து, எட்டையபுரம்.

தொகுப்பு: வி.எஸ்.சரவணன்

அடுத்த இதழில் ஆரம்பம்... மூன்றாம் பருவம் செயல்பாடுகள்!