Published:Updated:

நீராலானது உலகம்..! - ‘நீர்’ பாடத்துக்கு உரியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நீராலானது  உலகம்..! - ‘நீர்’ பாடத்துக்கு உரியது.
நீராலானது உலகம்..! - ‘நீர்’ பாடத்துக்கு உரியது.

நீராலானது உலகம்..! - ‘நீர்’ பாடத்துக்கு உரியது.

பிரீமியம் ஸ்டோரி

நீர் பற்றி சில சோதனைகளை, ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பில் மாணவர்களைச் செய்யவைக்கலாம்.   

நீராலானது  உலகம்..! - ‘நீர்’ பாடத்துக்கு உரியது.

திரவங்களின் பாயும் தன்மை

நீராலானது  உலகம்..! - ‘நீர்’ பாடத்துக்கு உரியது.

சமமான மேற்பரப்பு கொண்ட ஓர் அட்டையைச் சாய்வாக நிறுத்தவும். அட்டையின் மேல் பகுதியில் ஒரு கோடு வரையவும். நீர், தேன், விளக்கெண்ணெய், சமையல் எண்ணெய் ஆகியவற்றை உறிஞ்சுகுழாயின் உதவியுடன் எடுத்து, வெவ்வேறு இடங்களில் ஒரே நேர்க்கோட்டில் விடவும். ஒவ்வொரு திரவமும் எவ்வாறு செல்கிறது என்பதை உற்றுநோக்கவும். உயவுத்தன்மை அதிகம் உள்ள திரவங்களின் பாயும் திறன் குறைவாக இருக்கும். இதன் மூலம், திரவங்களுக்குப் பாயும் தன்மை உண்டு என்பதையும், ஒவ்வொரு திரவமும் வெவ்வேறு வேகத்தில் பாயும் என்பதையும் அறியலாம்.

பனிக்கட்டி நீரில் மிதப்பதேன்?

நீராலானது  உலகம்..! - ‘நீர்’ பாடத்துக்கு உரியது.

வாயகன்ற வாளியில் நீரை நிரப்பி, ஐஸ்கட்டிகளைப் போடவும். நீரைவிடக் குளிர்ந்த நிலையில் உள்ள பனிக்கட்டிகள், நீரின் மேற்பகுதியில் மிதப்பதைக் காணலாம். இதற்கு காரணம், நீரைக் குளிர்விக்கும்போது உருவாகும் பனிக்கட்டியானது, பருமன் அதிகரித்து அடர்த்தி குறைவதால் நீரில் மிதக்கிறது.

நீர் உருப்பெருக்கி

நீராலானது  உலகம்..! - ‘நீர்’ பாடத்துக்கு உரியது.

செயலிழந்த குண்டு பல்பு உள்ளே இருப்பனவற்றை நீக்கிவிட்டு, நீரை ஊற்றவும். பிறகு,  பல்பை ஒரு புத்தகத்தின் எழுத்துகள் மீது வைக்கவும். குண்டு பல்பு வெளிநோக்கி வளைந்திருப்பதால், நீர் நிரப்பியதும் இருபுற குவி லென்ஸாக செயல்படுகிறது. எனவே, உருப்பெருக்கியாக மாறி, எழுத்துகளைப் பெரிதாக காண்பிக்கும்.

நீரின் அடர்த்தி

நீராலானது  உலகம்..! - ‘நீர்’ பாடத்துக்கு உரியது.

இரண்டு பிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை அவற்றின் மேற்பரப்பு ஒன்றாக பொருந்தும் வண்ணம், டேப் மூலம் ஒட்டவும். ஒட்டப்பட்ட மூடிகளின் உட்புறம் இரு துளையிட்டு உறிஞ்சுகுழாய்களை படத்தில் காட்டியவாறு செருகவும். ஒரு காலி பாட்டிலில் மண்ணெண்ணெய் எடுத்து, கீழ்ப்பக்கமாக உள்ள மூடியில் இணைக்கவும். மற்றொரு காலி பாட்டிலில் நீரினை எடுத்து, மேற்புறம் உள்ள மூடியுடன் இணைக்கவும். இந்த அமைப்பை தலைகீழாக சாய்க்கும்போது, நீரைவிட அடர்த்தி குறைவாக உள்ள மண்ணெண்ணெய், உறிஞ்சுகுழாயின் வழியாக நீரை ஊடுருவி மேலே செல்கிறது. அதேசமயம், மற்றொரு உறிஞ்சுகுழாய் வழியாக அடர்த்தி அதிகம் உள்ள நீர், கீழ் உள்ள பாட்டிலுக்குள் செல்கிறது.

நீரின்  அழுத்தம்

நீராலானது  உலகம்..! - ‘நீர்’ பாடத்துக்கு உரியது.

ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் ஒரே அளவிலான மூன்று துளைகளை ஒன்றின் கீழ் ஒன்றாக இடுங்கள். துளைகளைக் கைகளினால் அடைத்து, பிளாஸ்டிக் பாட்டிலில் நீரை நிரப்புங்கள். அனைத்துத் துளைகளையும் ஒரே நேரத்தில் திறந்துவிடுங்கள். இதில், கீழே இருக்கும் துளையில் இருந்து விழும் நீர், அதிக தொலைவில் விழுகிறது. காரணம், ஆழம் அதிகரிக்கும்போது நீரின் அழுத்தம் அதிகரிக்கும். இதன் மூலம் நீருக்கு அழுத்தம் உண்டு என்பதை அறியலாம். 

நீர் எங்கே போனது?

நீராலானது  உலகம்..! - ‘நீர்’ பாடத்துக்கு உரியது.
நீராலானது  உலகம்..! - ‘நீர்’ பாடத்துக்கு உரியது.

சோதனைக் குழாயில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு உப்பை எடுத்துக்கொண்டு, டம்ளரின் உதவியால் சோதனைக் குழாயின் சுவர் வழியாக மெதுவாக நீரைச் சேர்க்கவும். நீரானது உப்போடு அதிகம் கலந்துவிடாமல் உப்பின் மேல் நிற்கும்படி ஊற்ற வேண்டும். கரைபொருளும் கரைப்பானும் ஒன்றாகக் கலக்காமல் இருப்பதால் நீர்மட்டம் உயரும். தற்போது, நீரின் மட்டத்தை ரப்பர் பேண்டைப் பயன்படுத்திக் குறித்துக்கொள்ளவும். இப்போது, உப்பு முழுவதும் கரையும் வரை குலுக்கவும். சோதனைக் குழாயை நன்கு குலுக்கியதும், கரைபொருளும் கரைப்பானும் சேர்ந்து ஒருவிதமான கரைசல் உண்டாகி, நீர்மட்டம் குறைவதைக் காணலாம்.

- ஜி.கிறிஸ்டோபர். மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி,   கோயம்புத்தூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு