Published:Updated:

ஐ.நா அவை! - ‘ஐ.நா. அவை’ பாடத்துக்கு உரியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஐ.நா அவை! - ‘ஐ.நா. அவை’ பாடத்துக்கு உரியது.
ஐ.நா அவை! - ‘ஐ.நா. அவை’ பாடத்துக்கு உரியது.

ஐ.நா அவை! - ‘ஐ.நா. அவை’ பாடத்துக்கு உரியது.

பிரீமியம் ஸ்டோரி
ஐ.நா அவை! - ‘ஐ.நா. அவை’ பாடத்துக்கு உரியது.

‘‘உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் நிறுவனம் எது தெரியுமா?’’ என வினா எழுப்பியதும், ‘ஐ.நா அவை’ என்று கோரஸாக பதில் வந்தது.

‘‘சரியான பதில்! இன்று ஐ.நா அவை பற்றிய பாடம் நடத்தி ஒரு செயல்பாட்டை செய்வோம்’’ என்றேன்.

ஐ.நா அவை பற்றிய குறிப்புகளைத் தனித்தனியே சார்ட்டில் எழுதி, பிரசார அட்டைகள் போல தயாரித்தோம். அவற்றைக் கையில் ஏந்தி மாணவர்கள் பேசினார்கள்.

ஐ.நா அவை! - ‘ஐ.நா. அவை’ பாடத்துக்கு உரியது.

இரண்டாம் உலகப் போரில் 50 மில்லியனுக்கு அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா, சோவியத் யூனியன், இங்கிலாந்து போன்ற நாடுகள் உலகத்தில் நிரந்தரமான அமைதி ஏற்படுத்த உருவாக்கிய அமைப்பே, ஐ.நா அவை.

ஐ.நா அவை! - ‘ஐ.நா. அவை’ பாடத்துக்கு உரியது.

இந்த அவையின் பெயரை அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர், ஃபிராங்கிளின் டி ரூஸ்வெல்ட் உருவாக்கினார். இதன் தலைமையகம், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ளது.

இதன் முக்கிய நோக்கங்கள்... உலகில் அமைதியை நிலைநாட்டல், அகதிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், தீவிரவாதத்தைத் தடுத்தல், மக்களாட்சியை மேம்படுத்துதல், அம்மை நோயினால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைத்தல், போலியோ நோயை ஒழித்தல், மலேரியா இறப்புகளைத் தடுத்தல், உணவு உற்பத்தியைப் பெருக்குதல் போன்றவை ஆகும்.

இவ்வாறு தங்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பேசினார்கள். அவர்கள் சொன்ன தகவல்களின் அடிப்படையில் மதிப்பீடு அளித்தேன்.

- ந.ஸ்ரீதர், சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு