‘பெண்மை’ பாடத்தில் பெண்ணின் நற்குணங்கள், உறவுமுறைகள் குறித்து நாமக்கல் கவிஞர் கூறியவற்றை ஒரு செயல்பாடாக செய்யவைத்தேன்.

மாணவர்களுக்குப் பிடித்த தோழிகளின் பெயர்களை எழுதி, இலையில் ஒட்டிக்கொண்டு வந்தார்கள். அந்தப் தோழிகளிடம் அவர்களுக்குப் பிடித்த நற்குணங்களைப் பற்றி பேசினார்கள். பிறகு, அந்தத் தோழிகளுக்கே அந்த இலையைப் பரிசாகத் தரச் செய்தேன். மாணவர்களின் உரையாடலில் வீரம், பொறுமை, பரிவு, அன்பு ஆகியவை பெண்மையின் குணங்களாகத் தோன்றின.

அதேபோல, சான்றாண்மையில் கூறப்படும் நற்குணங்களைக் கூறிய பின்பு, மாணவர்களுக்குப் பிடித்த நல்ல மனிதரைப் பற்றி பேசச் செய்தேன். ஒரு மாணவன் அவனுடைய அப்பாவைப் பற்றி சொல்லும்போது, “தவறு செய்தாலும் அடிக்காமல், மனம்விட்டுப் பேசி அன்பால் திருத்தும் என் அப்பா” என்று நெகிழ்வுடன் கூறினான்.

உங்கள் வகுப்பிலும் இதைச் செய்து பார்க்கலாமே!

- ரா.தாமோதரன், அ.மே.நி.பள்ளி, மெலட்டூர், தஞ்சை மாவட்டம்.