அன்பு நண்பர்களே... நலமா?

நான்தான் பிணந்தின்னிக் கழுகு மிகுந்த கவலையோடு எழுதுகிறேன்.

‘மாடு பிடுங்கி’ என்றும் ‘எருவை கழுகு’ என்றும் தமிழ் மொழியில் எங்களை அழைப்பார்கள். கழுகு இனத்தின் ராஜாக்கள் நாங்களே. சுற்றுபுறத்தில் இருக்கும் இறந்த உயிரிகளைச் சாப்பிட்டு சுற்றுச்சூழலுக்கும் உங்களுக்கும் உதவுகிறவர்கள்.

திருக்கழுகுன்றம் கழுகுகள் என்றால், எங்களைத் தமிழர்கள் உடனே அறிவார்கள். சங்கத் தமிழ் நூல்கள் எங்களை ‘பாறு’ என்று அழைக்கின்றன.

பறந்து விரிந்த இறக்கையும் உயரமான தேகமும் கூர்மையான அலகும் எங்களது அடையாளம். முன்பெல்லாம் ஊரில் இறந்துபோகும் மாடுகள், இதர கால்நடைகளை குளத்தங்கரையில் கொண்டுவந்து போடுவார்கள். அவற்றைத் தின்று வாழ்வோம். ஜைன மதமும் பவுத்த மதமும் தங்களது இறந்த மனிதர் உடல்களை திறந்த வானத்தின் கீழே கிடத்துவிடுவார்கள். நாங்கள் அவற்றை எங்களது உணவாக்கி அப்புறப்படுத்துவோம்.

திருக்கழுகுன்றத்தில் தினந்தோறும் நைவேத்திய உணவு அருந்த சரியான நேரத்தில் வந்துகொண்டிருந்த நாங்கள், சில ஆண்டுகளாக வருவது இல்லை. 1950 சமயத்தில் சென்னை பகுதியில் காக்கைகளைவிட அதிக எண்ணிக்கையில் காணப்பட்டவர்கள் நாங்கள்.

1990-ம் ஆண்டுகளுக்கு படிப்படியாக குறைந்து, இன்று சில 100 கழுகுகள் மிஞ்சி இருப்பதே அரிது என்று உலக வன விலங்கு பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. பேரழிவின் விளிம்பில் இருக்கிறோம் நண்பா!
அதன் காரணம் விநோதமானது. ஆடு, மாடு, பிராய்லர் கோழிகள் வளர்ப்பவர்கள் அவற்றுக்கான நோய்த் தடுப்புக்காக, டைக்ளோஃபினாக் (Diclofenac) எனும் மருந்தை செலுத்துகிறார்கள். இது ஒரு வலிநிவாரணி. இந்த மருந்து அதிகமாக செலுத்தப்படும் கால்நடைகள் இறந்துபோகும். இவற்றை வெட்டவெளியிலேயே போட்டுவிடுவார்கள். அது தெரியாமல் எங்கள் இனம் அவற்றை உட்கொள்ளும். சிறுநீரகம் பழுதடைந்து மரணம் ஏற்படும். இப்படித்தான் எங்கள் இனம் அழியத் தொடங்கியது.

இந்தியாவில் 500 மில்லியன் கால்நடைகள், மனிதர்களால் வளர்க்கப்படுகின்றன. அவற்றில் இறந்த கால்நடைகள் பலவும் வீசி எறியப்படுகின்றன. இன்று அவை துரிதமாக அழிய வழியின்றி நீர்நிலைகள் நஞ்சாகி, நோய் பரவும் ஆபத்தை இந்தியா எதிர்கொண்டுள்ளது.

எங்களது இனத்தை பேரழிவில் இருந்து உங்கள் சந்ததிதான் மீட்க வேண்டும் நண்பா!

டைக்ளோஃபினாக் வலிநிவாரணியை தடைசெய்ய குரல் எழுப்புங்கள். சுற்றுப்புறம் மற்றும் ஆற்றின் கரைகளில் பாலித்தீன் குப்பைகளைக் கொட்டுவதை நிறுத்த வலியுறுத்துங்கள்.

செய்வீர்களா நண்பர்களே?

இப்படிக்கு பிணந்தின்னிக் கழுகு உங்கள் ஊர் குளக்கரை