வணக்கம் நண்பர்களே! இன்று ஒரு வித்தியாசமான பென்சில் உங்களை சந்திக்க வந்துள்ளது.

‘அப்படி என்ன நாங்க பார்க்காத பென்சில்?’ என்றுதானே கேட்கிறீர்கள்? இந்த பென்சில் பெயர், ஃபார்ம்சில் (FARMCIL).

அடிப்பகுதியில் ரப்பர் வைத்த பென்சில்களைப் பார்த்திருப்பீர்கள். அதுபோல இந்த பென்சிலின் அடிப்பகுதியில் ஒரு கேப்ஸ்யூல் இருக்கும். அதில், விதைகள் இருக்கும். நீங்கள் பென்சிலின் அடிப்பகுதி வரை எழுதி முடித்ததும், மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றினால், சில நாட்களில் ஒரு செடி துளிர்விடும்.

இந்த ஃபார்ம்சில் பென்சிலை இந்தியாவில் முதன்முதலில் தயாரித்து காப்புரிமை பெற்றுள்ளார்கள் கோயம்புத்தூர், ஆர்&ஆர் நிறுவனத்தின் ராஜகமலேஷ் மற்றும் ரஞ்சித்குமார்.

“சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், இந்த பென்சிலைத் தயாரித்துள்ளோம். எந்த விதையை எவ்வளவு நாட்கள் இந்த கேப்சூலில் வைத்திருக்கலாம், அதன் பாதுகாப்பு, மண்ணில் நட்ட பிறகு செடியாக வளருமா போன்ற விஷயங்களை எல்லாம் ஆய்வுசெய்து தயாரித்துள்ளோம். ஒரு பென்சிலின் விலை 10 ரூபாய். ஒரு பெட்டிக்கு எட்டு பென்சில்கள் இருக்கும். அதில், பூச்செடிகளின் விதைகளுடனும் நான்கும், காய்கறி செடிகளின் விதைகளுடன் நான்கும் இருக்கும். உள்ளே என்ன விதை உள்ளது என்று பென்சிலின் மேலே குறிப்பிட்டுள்ளோம். தக்காளி, மிளகாய், வெண்டைக்காய், கத்திரிக்காய் மற்றும் சில பூ வகை விதைகள் இந்த பென்சில்களில் உள்ளன’’ என்கிறார்கள்.

மாதத்துக்கு ஒருமுறை விதை வகைகளை மாற்றுவதால், ஒவ்வொருமுறை பென்சில்கள் வாங்கும்போதும், வெவ்வேறு செடிகளுக்கான விதைகள் கிடைக்கும்.

‘‘நாங்கள் இந்த பென்சிலை 100 குழந்தைகளுக்கு விற்றால், அதில் 50 செடிகளாவது உருவாகும் என்று நம்புகிறோம்’’ என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள் ராஜகமலேஷ் மற்றும் ரஞ்சித்குமார்.