பிரீமியம் ஸ்டோரி
 லைக் யூ நிழலே!

‘மாத்தி யோசி’ கான்செப்ட் எப்போதும்  லைக்ஸ் அள்ளி, வெற்றியை அளிக்கும். அந்த வகையில், பெல்ஜியத்தைச் சேர்ந்த வின்சென்ட் பால் (Vincent Bal), பொருட்க ளின்  நிழல்களை வைத்து  ஓவியங்களை வரைந்து அசத்திவருகிறார்.

 லைக் யூ நிழலே!
 லைக் யூ நிழலே!

திரைப்படத் தயாரிப்பாளரான வின்சென்ட், இந்த ஐடியாவை ‘ரூம் போட்டு’ பிடிக்கவில்லை. ‘‘ஒருநாள் புதுப் படத்துக்கான ஸ்கிரிப்ட் பரபரப்பில்  இருந்தோம். நான் டீ சாப்பிட்ட கப்பை அருகில் உள்ள ஒரு வெள்ளைப் பேப்பர் மீது வைத்தேன். பேசிக்கொண்டே டீ கப்பின் நிழலில் பென்சிலால் எனக்குத் தோன்றியதைக் கிறுக்கினேன். அது  பார்ப்பதற்கு யானை போல் தெரிந்தது.    செல்போனில் அந்த நிழல் ஓவியத்தை படம் பிடித்து,  ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன்'' என்கிறார்.

அந்தப் படத்துக்குக் கிடைத்த லைக்ஸ் மற்றும் ஷேர்களைப் பார்த்து குஷியான வின்சென்ட், விதவிதமான பொருட்களின் நிழலுக்குப் பொருத்தமான ஓவியங்களை தொடர்ந்து வரைய ஆரம்பித்துவிட்டார்.

இந்த ‘மாத்தி யோசி' ஓவியங்களுக்கு உங்கள் லைக்ஸும் உண்டுதானே!                                                 =  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு