உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள புத்தகங்களை அறிமுகம் செய்யும் பகுதி இது. பெற்றோர்கள், இந்தப் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதன் மூலம், தங்கள் குழந்தைகளுக்கு புதிய உலகை அறிமுகம் செய்யலாம். அவர்களின் கற்பனைத் திறனை மேம்படுத்தலாம்.

ஒரு வகுப்பில் இருக்கும் எல்லாரும் முதல் ரேங்க் எடுக்க முடியாதல்லவா? அப்படி முதல் ரேங்க் வாங்காதவர்களுக்காக எழுதப்பட்டதுதான், ‘டிம்மி ஃபெய்லியர்’ (Timmy Failure) புத்தக வரிசை.

உலகின் நம்பர் 1 துப்பறியும் டிடெக்டிவ் ஆக விரும்பும் டிம்மிக்கு, பள்ளிக்குப் போகவே பிடிக்காது. வகுப்பறையில் உட்கார்ந்தும் தனது டிடெக்டிவ் ஏஜென்சியைப் பற்றியே யோசிப்பான். கோபமடையும் ஆசிரியர், அவனை அந்த வகுப்பில் முதல் மூன்று ரேங்க் வாங்குபவர்களுடன் உட்கார வைக்கிறார். கடைசி பெஞ்ச்சில் இருந்து முதல் வரிசைக்கு வரும் டிம்மி, நண்பர்களை இப்படி அறிமுகப்படுத்துகிறான்...

ரோலோ டூக்கஸ்: முதல் ரேங்க் எடுக்கும் ரோலோ, ரொம்ப நேரம் படிப்பதாலேயே அதிக மார்க் வாங்குகிறான். மற்றபடி அவன் ஒன்றும் புத்திசாலி இல்லை.

மோலி: நான் ‘புத்திசாலித்தனமா’ என்ன திட்டம் போட்டாலும், அதைக் கெடுப்பதே இந்த மோலியின் வேலை.

கொரீனா: என்னுடைய முதல் எதிரி. அதனாலேயே கொரீனாவின் முகம் மார்ஃப் செய்யப்பட்டுள்ளது.

இந்த மூன்று நண்பர்களைத் தவிர, டிம்மிக்கு நெருங்கிய நண்பன், டோட்டல் (Total) என்ற பனிக்கரடி. டிம்மியின் துப்பறியும் நிறுவனத்தில் இந்தக் கரடியும் ஒரு பார்ட்னர். அதனால், இவர்களது டிடெக்டிவ் ஏஜென்சிக்கு ‘Total Failure’ என்று பெயர்.

பேட்மேனுக்கு எப்படி ஒரு வாகனம் (பேட்-மொபைல்) இருக்கிறதோ, அதுபோல டிம்மியிடமும் ஒரு வாகனம் இருக்கிறது. ஆனால், டிம்மி அதில் ஒரு இடத்துக்குப் போகும்போதெல்லாம், டோட்டல் அவனுக்கு முன்பாகச் சென்று ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிடும். டிம்மியின் வாகனம் அவ்வளவு வேகம்.

டிம்மி துப்பறிந்த ஒரு கதை... டிம்மியின் கிளாஸ்மேட் குன்னரின் சாக்லேட்டுகள் காணாமல் போய்விடுகின்றன. அவற்றைக் கண்டுபிடிக்க துப்பறியும் சார்ஜ் 4 டாலர் என்று சொல்லி, துப்பறிய ஆரம்பிக்கிறான். பக்கத்து அறையில் குன்னரின் தம்பி, வாயெல்லாம் சாக்லேட் கறையுடன் இருக்கிறான். அவனைச் சுற்றி ஏகப்பட்ட சாக்லேட் கவர்கள் இருக்க, டிம்மி ஒரு குறிப்பு எழுதுகிறான்: குன்னரின் தம்பி சுத்தமாகவே இல்லை.

டிம்மியின் நண்பன் ரோலோ, ‘குன்னரின் தம்பிதான் சாக்லேட்டை எடுத்திருக்கிறான்’ என்று சொல்வதை டிம்மி மறுக்கிறான். விரைவில் அந்த சாக்லேட் மர்மத்தைக் கண்டுபிடிப்பேன் என சவால் விடுகிறான். இப்படித்தான் துப்பறிகிறார் நமது ஹீரோ.

டிம்மியின் கரடி நண்பன் டோட்டல், மற்ற யார் கண்களுக்கும் தெரியாது. நண்பர்கள் இல்லாமல் இருக்கும் நவீன உலகின் சிறுவர்களை மறைமுகமாகச் சொல்கிறார், கதாசிரியர் ஸ்டீபன்.

படிக்க ஜாலியாக இருக்கும் இந்தக் கதைத் தொடரில் நாம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. குழந்தைகளுக்கு இதை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள்தான் இதன் முதன்மையான ரசிகர்களாக இருக்கிறார்கள்.

கதாசிரியர் & ஓவியர்: ஸ்டீபன் பாஸ்டிஸ் (Stephan Pastis), அமெரிக்கா

சிறு வயதில் அடிக்கடி காய்ச்சல் வந்து, பல நாட்கள் படுக்கையிலேயே இருப்பார் ஸ்டீபன். இவருக்கு போரடிக்காமல் இருக்க இவருடைய அம்மா, ஓவியம் வரைய சொல்வார். அப்படி ஆரம்பித்து, காமிக்ஸ் கதாசிரியராக மாறினார்.

சட்டம் படித்து, வக்கீலாகப் பணியாற்றி வந்தவருக்கு அந்த வேலை போர் அடித்தது. புகழ்பெற்ற பீனட்ஸ் (Peanuts) காமிக்ஸ் கதையின் கதாசிரியர் சார்லஸை ஒருநாள் காபி ஷாப்பில் சந்தித்தார். அவர், மூன்று பாடங்களைக் கற்பித்தார்.
1. உதவி கேட்கத் தயங்காதே, 2. சூழலுக்கு ஏற்ப புதியவற்றைக் கற்றுக்கொள், 3. நல்ல நண்பர்களை உடன் வைத்துக்கொள்.

அதன் பிறகு, தனது காமிக்ஸ் தொடரை வரைய ஆரம்பித்தார் ஸ்டீபன். பல பத்திரிகைகள் நிராகரித்தன. அவரது ஓவியங்களில் தவறு இல்லை. ஆனால், தினமும் 3 கட்டங்களில் செய்தித்தாளில் வரும் Daily Strip காமிக்ஸ் வகைக்கு அவருக்குப் பிடிபடவில்லை. Dilbert காமிக்ஸ் புத்தகங்களைப் படித்து, தனது ஸ்டைலை மாற்றிக்கொண்டார்.

அதன்பிறகு, சுமார் 200 காமிக்ஸ் ஸ்ட்ரிப்புகளை வரைந் தார் ஸ்டீபன். அவையும் நிராகரிக்கப்படுமோ என்ற பயத்தில், பத்திரிகைகளுக்கு அனுப்பாமலேயே வைத்திருந்தார். அவருடைய நண்பர் பாஸிடிவ்வாகப் பேசி, அனுப்பச் சொன்னார்.

யுனைடெட் ஃபியூசர்ஸ் (United Feature) என்ற நிறுவனம் இவரது காமிக்ஸ் தொடரை அவர்களது இணையத்தில் வெளியிட்டு, வாசகர்கள் வரவேற்பு எப்படி இருக்கிறது என்று சோதனை செய்தது. Dibert காமிக்ஸ் படைப்பாளியான ஸ்காட் ஆடம்ஸ், இந்த காமிக்ஸைப் புகழ்ந்து பேச, ஸ்டீபனின் காமிக்ஸ் பயணம் துவங்கியது.

இன்று உலகின் 750 செய்தித்தாள்களில் இவரது காமிக்ஸ் தொடர் வெளியாகின்றன.

கதை: Mistakes Were Made

கதாசிரியர் & ஓவியர்: ஸ்டீஃபன் பாஸ்டிஸ்

மொழி: ஆங்கிலம் (ஆரம்ப நிலை).

வயது: 7 வயது முதல் அனைவரும் படிக்கலாம்.

வெளியீடு: 2013 (முதல் கதை), 2016 (ஆறாவது கதை)

பதிப்பாளர்:  Walker Press (USA)

புத்தக அளவு: 12.9 x 19.8 Inches

பக்கங்கள்: 304

விலை: 186 ரூபாய்.

கதை வரிசை: மொத்தம் 6 புத்தகங்கள் (இன்னும் பல வர இருக்கின்றன).

விருதுகள்: சமகால சிறுவர் இலக்கியங்கள் 100 வரிசையிலும், நியூயார்க் டைம்ஸ் விற்பனை சாதனைப் பட்டியலிலும் இருக்கிறது.

சிறப்பு அம்சம்: ஒரு ஜாலியான கதையைப் படிக்கும்போதே அறிவியல் முதல் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் வரை அனைத்தையும் கதையில் வரவழைத்து, முக்கியமான விஷயங்களை மிகவும் எளிமையான பார்வையில் அளிக்கிறது. ‘வாழ்க்கையில் எல்லாமே சிம்பிள்தான் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், எதுவுமே கஷ்டமில்லை’ என்ற தத்துவத்தை விளக்குகிறது.