27 நாடுகளின் தூதரக அலுவலகங்கள் வாடிகனில் உள்ளன.

இத்தாலி நாட்டின் அங்கமாக இருந்து, 1929-ம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று, வாடிகன் தனி நாடானது. இதன் பரப்பு 110 ஏக்கர். மக்கள்தொகை 900 பேருக்கும் குறைவு. அதிலும் பாதி பேர்தான் வாடிகன் குடியுரிமை பெற்றவர்கள்.

ஆகஸ்ட்-1, 1929 முதல் சர்வேதேச தபால் சேவை வாடிகனில் தொடங்கியது.தபால்தலைகளில் திருத்தந்தையின் படமும் கிறிஸ்துவின் பொன்மொழிகளும் அச்சிடப்படுகின்றன.

உலகின் மிகச் சிறிய நாடு ‘வாடிகன்’. வாடிகன் என்றால், ‘கடவுளிடம் இருந்து வரும் செய்திகளைப் பரப்பும் இடம்’ என்று பொருள்.

இந்த நாட்டுக்குச் சொந்தமாக பாதுகாப்புப் படை கிடையாது. சுவிட்சர்லாந்து அரசு 110 வீரா்களைக் காவல் பணிக்காக கொடுத்துள்ளது.

புனித பீட்டர் தேவாலயத்தில் பிரபல ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ, ஓவியங்களை வரைந்துள்ளார். 1508-ல் ஆரம்இத்து 1512-ம் ஆண்டு வரை வரைந்த இந்த ஓவியங்களில், ‘ஆதாமின் உருவாக்கம்’ என்கிற ஓவியம் மிகவும் புகழ்பெற்றது.

இத்தாலி அரசு வாடிகனில் இருந்து எடுத்துக்கொண்ட நிலப் பகுதிக்கு ஈடாக, 1929-ம் ஆண்டு இந்திய மதிப்பில் 20 கோடி ரொக்கமாகவும், 26 கோடி மதிப்புக்கு அரசுப் பத்திரமாகவும் கொடுத்தது. இந்தத் தொகைக்கான வட்டி, ஆலய உண்டியல் காணிக்கை, உலக மக்கள் அனுப்பிவைக்கும் காணிக்கை, செல்வந்தர்கள் எழுதிவைக்கும் உயில்கள் மூலமாகக் கிடைப்பது போன்றவையே வாடிகனின் வருமானம்.

இங்கு இருக்கும் புனித பீட்டர் தேவாலயம் 5.7 ஏக்கர் பரப்பளவுகொண்டது. இங்குதான் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவர் போப் அருட்பணி புரிகிறார். அவரின் பதவிக் காலம், வாழ்நாள் முழுவதும்.தற்போது பதவியில் இருக்கும் ஃபிரான்சிஸ் 266-வது போப் ஆவார்.

லிரா மதிப்பிலான அனுமதிச் சீட்டு பெற்று, அருங்காட்சியகத்துக்குள் செல்லலாம். 1 மணி நேரமே உள்ளே இருக்க அனுமதி.

அருங்காட்சியகத்தில் ரோமப் பேரரசின் வரலாற்றுச் சின்னங்கள், 3,000 ஆண்டுக்கு முந்தைய மண்டை ஓடுகள், ஆடைகள், வண்டிகள், கலை நயமிக்க தூண்கள், சிலைகள், 28,000 வகைக் கற்கள், உலகின் பெரிய பைபிள், சிறிய பைபிள் எனப் பலவும் உள்ளன. ஐரோப்பாவின் மிகப் பெரிய நூல் நிலையம் இங்குள்ளது.

புனித போப்பின் அறையில் தங்க சிம்மாசனம் உள்ளது. ஆனால், அதை அவர் உபயோகிப்பது இல்லை. அவர் பயன்படுத்த குதிரைகள் பூட்டிய 14 கோச் வண்டிகள் உண்டு. வண்டி முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டு, படிகள் வெள்ளியால் செய்யப்பட்டு இருக்கும்.

வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனியால், 1931-ம் ஆண்டு வாடிகனில் வானொலி நிலையம் அமைக்கப்பட்டது. இதில் 47 மொழிகளில் செய்தி, மதவிழாக்கள் மற்றும் இசை ஆகியவை ஒலிபரப்பப்படுகின்றன.

வாடிகன் அரண்மனையில் 200-க்கும் மேற்பட்ட மண்டபங்களும் 11,000-க்கும் மேற்பட்ட அறைகளும் உள்ளன.

ஒவ்வொரு முறையும் புனித போப்பை சந்திக்க `சேம்பா்லின்’ என்ற அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். உலகின் 222 நாடுகளில் திருத்தந்தையின் தூதா்களைத் திருத்தந்தையின் ஆலோசனைக் குழு நியமிக்கும்.